கடலூரில் 28ம் தேதி எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா ஓ.பி.எஸ்., பங்கேற்பு: மாஜி எம்.எல்.ஏ., அய்யப்பன் அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
07:19

கடலுார்: ''கடலுாரில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்'' என, முன்னாள் எம்.எல்.ஏ.,, அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த அய்யப்பன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

இக்கூட்டம் வாழ்நாள் சாதனை கூட்டமாகவும், மக்கள் நலனுக்காக பாடுபடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு புகழ் சேர்க்கும் வகையிலும் அமைய வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., இறப்புக்கு நீதி விசாரணை கேட்டு கடலுாரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்று, பலத்தை நிரூபித்ததால், கடலுார் மாவட்டத்திற்கு சிறப்பான பெயர் கிடைத்தது.

இதேபோன்று, வரும் 28ம் தேதி நடைபெற இருக்கும் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும் உணர்வுப் பூர்வமாக குடும்பத்தோடு திரளாக பங்கேற்க வேண்டும்.

கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்களை தயார்படுத்துவது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

அதன்படி கடலுார், பண்ருட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நெல்லிக்குப்பம் சுகம் திருமண மண்டபத்தில் இன்று (13ம் தேதி) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.