மத்திய அரசு நிதி கொடுத்தால் ஏழாவது ஊதியக்குழு அமல்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2017
07:20

புதுச்சேரி: மத்திய அரசு நிதி கொடுத்தால், அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களி டம் கூறியதாவது:

மத்திய அரசை தொடர்ந்து அணுகி, புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல திட்டங்களை கேட்டு வருகிறோம்.

புதுச்சேரியை மத்திய நிதி கமிஷனில் சேர்க்க மத்திய நிதித்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன். இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் தாமதம் ஆகும்.

எனவே அமைச்சரே முடிவு எடுத்து சேர்க்க கடிதம் கொடுத்துள்ளேன். அப்படி சேர்த்தால் தற்போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் 27 சதவீத நிதி 42 சதவீதமாக உயரும்.

கடந்த 5 ஆண்டாக திட்டமில்லா செலவு 567 கோடியாகவே இருந்து வருகிறது. இதனால் மத்திய அரசிடமிருந்து திட்டமில்லா செலவிற்காக கிடைக்க வேண்டிய 10 முதல் 15 சதவீத அதிகப்படியான நிதி கிடைக்கவில்லை.

இதற்காக ரூ.1,250 கோடி சிறப்பு நிதியும் கேட்டுள்ளேன். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்றியதற்கான நிதியும் தர வேண் டும் என கேட்டுள்ளேன்.

புதுச்சேரி அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய அரசு நிதி கொடுத்தால் அவர்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். புதுச்சேரி பட்ஜெட்டில் ரூ.2500 கோடி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாகவும், பென்ஷனாகவும் செலவு செய்யப்படுகிறது.

இதனால் அரசு நிறுவனங்களில் கொள்ளைப்புறமாக பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு சம்ப ளம் தர முடியாத சூழல் உள்ளது.

அந்நிறுவனங்களை மேம்படுத்த, சட்டசபையில் அறிவித்தபடி குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்துறை இழப்பு சரி செய்யப்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி.,யால் வருமானம் உயரும் திட்டங்களை நிறைவேற்ற உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசி னார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.