கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சாலையில், 'நீச்சல் குளம்' திறப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:15

பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்குவதால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை நகரின்

பிரதான சாலைகளில்

ஒன்றாக, கிண்டி இணைப்பு சாலை

விளங்குகிறது.

இது, சைதாப்பேட்டையில் இருந்து

ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லுார்,

வாணுவம்பேட்டை, உள்ளகரம் - புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

இதில், மாநகர பேருந்துகள், ஆயிரக்கணக்கான

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

இச்சாலையில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில், பாதாள சாக்கடை அடைப்பில் இருந்து கழிவுநீர் வெளியேறியது. இது சாலையில் தேங்கி, பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

சாலையில் நீண்ட துாரம் தேங்கியுள்ள கழிவுநீரில், பல்வேறு கழிவுகள் மிதக்கின்றன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடக்கவே முடியாத நிலை உள்ளது.

மேலும், அதிகளவில் தேங்கியுள்ள கழிவு

நீரில், வாகனங்கள் கடப்பது பெரும் சிரமமாக

உள்ளது. பள்ளம் மேடு தெரியாத நிலையில்,

ஓட்டிகள் தடுமாறி விழ நேரிடுகிறது.

எதிரெதிர் திசையில் பயணிக்கும் வாகனங்

களால், கழிவுநீர் தெறித்து, வாகன ஓட்டிகள் மீது துர்நாற்றம்

வீசுகிறது.

சம்பந்தப்பட்ட

அதிகாரிகள், சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றிட

வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.