தொடர்ச்சி இல்லாத வடிகால் நோய் பாதிப்பில் பகுதி மக்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:15

பெருங்குடி: தொடர்ச்சி இல்லாமல், துண்டு துண்டாக நிற்கும் வடிகாலில் கழிவுநீர் தேங்கி, மர்ம காய்ச்சல் பரவுவதால், மடிப்பாக்கம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெருங்குடி மண்டலம், 187, 188 ஆகிய வார்டுகள், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவை. இங்கு, கழிவுநீர் இணைப்பு வசதி இல்லை. மழைநீர் வடிகாலில் தான், கழிவுநீர் விடப்படுகிறது. மழைக்காலங்களில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

இது ஒருபுறமிருக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில், இரண்டு வார்டுகளில் உள்ள, 501 தெருக்களில், 300க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு உள்ளது.

இதற்காக, 25 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் இந்த வடிகால் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைய வேண்டும்.

ஆனால், 60 சதவீத தெருக்களில், வடிகால் தொடர்ச்சி இல்லாமல், ஆங்காங்கே துண்டு துண்டாக நிற்கிறது.

இதனால், மழைநீர் கடந்து போகாமல்

தேங்குகிறது. தேங்கும்

கழிவுநீரால், கொசு

உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய்கள்

பரவுகின்றன.

பல மாதங்களாக வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், ராமமூர்த்தி நகர், ராம் நகர், மகாலட்சமி நகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில்,

சமீபகாலமாக மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

பெரும்பாலான வீடுகளில், கழிப்பறை குழாய்களையும், வடிகாலில் இணைத்துள்ளனர். இதைக் கவனித்து தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என, மக்கள் குற்றம்

சாட்டுகின்றனர்.


துண்டாக நிற்கும் வடிகால்களை இணைக்க, மாநகராட்சி அதிகாரிகளிடம் மூன்று ஆண்டுகளாக முறையிட்டு வருகிறோம்; ஏமாற்றம் தான் மிஞ்சியது. எங்கள் பகுதியில் மாதந்தோறும், 20 பேராவது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

மடிப்பாக்கம் மக்கள்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.