அதிக குப்பை உருவாகும் வளாகம் மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:16

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில், நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கும் அதிகமாக குப்பை சேகரிக்கும் வளாகங்கள் எவை என, மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதி, 2016ன் படி, அக்., 2ம் தேதி முதல், குப்பை சேகரிப்பு முறையில், சென்னை மாநகராட்சி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரித்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில், மக்காத குப்பை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மட்டும் பெறப்படும். மக்கும் குப்பை, தினமும் பெறப்படும்.

நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கு மேல் குப்பையை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, தனி குடியிருப்பு வளாகம், வணிக நிறுவனம், ஓட்டல், வர்த்தக பகுதி, வணிக வளாகம் ஆகியவற்றில், சென்னை மாநகராட்சி இனி குப்பையை பெறாது.அந்த வளாகங்களிலேயே குப்பை தரம் பிரிக்கப்பட்டு, அவர்களே மறு சுழற்சி செய்ய வேண்டும். இதற்காக, சென்னை மாநகராட்சி, மண்டல வாரியாக, அதிக குப்பையை உருவாக்கும் வளாகங்கள் எவை என, கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கு மேல் குப்பை உருவாக்கும் வளாகங்கள், சென்னையில், ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கின்றன. சென்னை மாநகராட்சியின் பழைய மண்டலங்களிலும், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய பகுதிகளிலும், இந்த வளாகங்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது குறித்த துல்லியமான புள்ளிவிபரம், ஒரு வாரத்தில், மாநகராட்சியிடம் வழங்கப்படும்.

அதன் பின், இந்த வளாகங்களுக்கு, 'நோட்டீஸ்' அளிக்கப்படும். ஏற்கனவே, வட்டார அளவில் குப்பையை தரம் பிரித்து, மறு சுழற்சி செய்ய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த குறும்படங்களும் தயாராகி வருகின்றன. கால அவகாசம் கேட்கும் வளாகங்களில் மட்டும், ஓரிரு மாதங்களுக்கு மாநகராட்சி குப்பையை பெறும்.

ஆனால், அவகாசம் கேட்கும் வளாகங்களில், குப்பை மறு சுழற்சி செய்வதற்கான பணிகளை செய்வது தொடர்பாக, மாநகராட்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதை, மாநகராட்சி

கண்காணிக்கும். சென்னையில், 100 கிலோ குப்பைக்கு மேல் உருவாக்கும் வளாகங்களில், ஜனவரி முதல் கட்டாயமாக குப்பை பெறப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.