ஆக்கிரமிப்புகளால் வணிக பகுதியாக மாறிய... ஏரி நிலம்! ஆளுங்கட்சி பிரமுகர்களின் அட்டூழியம் அம்பலம்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
00:16

தாசில்தாரின் எச்சரிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பு, நமது நாளிதழ் சுட்டிக்காட்டி வெளியிட்ட

செய்தியையும் மீறி, சோழிங்கநல்லுாரில் வருவாய் துறை அதிகாரிகளின் ஆசியோடு, ஏரி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, சோழிங்கநல்லுார் தாலுகாவில் உள்ள, பொன்னியம்மன் கோவில் பகுதி, சர்வே எண், 439ல், தாமரைக்கேணி ஏரி உள்ளது. இந்த ஏரி, ஐ.டி., காரிடார் எனப்படும், ராஜிவ்காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 50 ஏக்கர் பரப்பளவிற்கும் மேல் பரந்து விரிந்து காணப்பட்ட தாமரைக்கேணி ஏரி, ஆக்கிரமிப்பால் தற்போது ஒற்றை இலக்க ஏக்கராக சுருங்கிவிட்டது.


இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய ஏரி மேலும் சுருங்கி வருகிறது. ராஜிவ்காந்தி சாலையை ஒட்டி, கடைக்குட்டை மேடு என்ற பகுதியில், இந்த ஏரிக்கு மேல் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலம், சில ஏக்கர் பரப்பளவிற்கு காலியாக இருந்தது.எச்சரிக்கை பலகை:


இதை, உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளாட் போட்டு விற்பனையில் ஈடுபட்டனர். அப்போது, சோழிங்கநல்லுார் தாசில்தாராக இருந்த ரவிச்சந்திரனுக்கு, இது சம்பந்தமாக புகார் வந்தது. பிளாட் கற்களை பிடுங்கி எறிந்துவிட்டு, இது ஏரி புறம்போக்கு நிலம் என்றும், அத்துமீறுவோர் தண்டிக்கப்படுவர் என்றும் தாசில்தார் எச்சரிக்கை பலகை வைத்தார்.


தாசில்தார் ரவிச்சந்திரன் பணிமாறுதலாகி சென்றதும், எச்சரிக்கை பலகையை இரவோடு இரவாக பிடுங்கி எறிந்துவிட்டு, மீண்டும் பிளாட் போடுவதற்கான முயற்சியில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் களமிறங்கினர்.


ரூ.1 லட்சம் விலை:


கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்த ஏரி புறம்போக்கு நிலத்தை, முழுமையாக தனியார் ஒருவருக்கு விற்பனை செய்ய, ஆளுங்கட்சி பிரமுகர்கள், சென்ட் ஒரு லட்சம் ரூபாய் என விலை பேசினர்.அப்போது, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்த வருவாய் துறை அதிகாரிகள், அந்த இடம் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் கூறினர். ஆனால், ஆளுங்கட்சி பிரமுகர்களின் அழுத்தம் காரணமாக, வருவாய் துறை அதிகாரிகள் அந்த பக்கமே தலைகாட்டவில்லை.குறிப்பிட்ட புறம்போக்கு நிலமும் விற்பனை செய்யப்பட்டு, தற்போது வணிக பகுதியாக உருமாறியுள்ளது.


இது குறித்து பகுதிவாசி ஒருவர் கூறியதாவது: தாமரைக்கேணி ஏரியின் பெரும்பகுதி, உள்ளூர் அரசியல்வாதிகளால் தான் விற்பனை செய்யப்பட்டது. முன்பு, குடியிருப்புக்காக சில சென்ட் இடங்களை விற்றனர். தற்போது நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடங்களை, சட்டவிரோதமாக பல லட்சத்திற்கு விற்றுள்ளனர். வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், 'தாமரைக்கேணி ஏரியில் உள்ள ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வலியுறுத்தி, விரைவில் நோட்டீஸ் வழங்கப்படும்.

'மேலும் ஏரியை மேம்படுத்தி பாதுகாக்க திட்டம் வகுக்கப்படும்' என்றார்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
15-செப்-201705:27:57 IST Report Abuse
Siva Kumar ஏன் தினமலரே பொதுநல வழக்கு தொடரக்கூடாது?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-செப்-201714:31:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அவ்வ்வ்வ்.....
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-செப்-201710:59:52 IST Report Abuse
Indhuindian அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201710:03:30 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த தில்லு முள்ளுக்கு காரணமான ஆளுங்கட்சி பிரமுகர் அனைவைரையும் குண்டாசில் உள்ளதள்ளவேண்டும்...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-செப்-201714:31:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கவர்னரும்,, ஜனாதிபதியும், பிரதமரும் சண்டைக்கு வருவார்களே....
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
14-செப்-201705:57:24 IST Report Abuse
Nalam Virumbi இந்த மாதிரி விஷயங்களை நீதிமன்றத்தில் ஏன் பொதுநல வழக்காய் எடுத்து நடத்தக் கூடாது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.