சொந்த மண்ணில் ஆதரவில்லை: தினகரன் தரப்பு, 'அப்செட்'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 செப்
2017
06:47

தஞ்சாவூர்: அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களின் சொந்த மண்ணில் ஆட்கள் இல்லாதது, தினகரன் தரப்பினரை சோர்ந்து போக செய்துள்ளது.



அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் பதவிகளை பறித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் எம்.பி., வைத்திலிங்கம் ஆகியோரின் உருவ படங்களை எரித்து, தஞ்சையில், தினகரன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 126 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா தரப்பினரின் சொந்த ஊர் மன்னார்குடி என்றாலும், அவர்கள் தஞ்சாவூரை, தங்களின் அரசியல் களமாக பயன்படுத்தி வந்தனர். மாவட்ட, அ.தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ள, 90 சதவீதம் பேர், சசிகலா சிபாரிசு அடிப்படையில் பதவி பெற்றவர்கள். இப்படிப்பட்ட சூழலில், தங்களை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை மாவட்டத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என, தினகரன் தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதுமே வெறும், 126 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டதால், தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.


 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.