விரைவில் டெண்டர் கோர முடிவு - ரூ.300 கோடி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு ஒப்புதல்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 அக்
2017
22:01

சென்னை : மிதிவண்டி பகிர்ந்து பயன்படுத்தும் திட்டம், வாகன நிறுத்த மேலாண்மை உள்ளிட்ட, 300 கோடி ரூபாய் செலவிலான, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு, உயர்மட்ட குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான, உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில், 300 கோடி ரூபாய் செலவிலான, 17 வகையான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு, டெண்டர் கோர, உயர்மட்ட குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 12 ஆயிரத்து, 47 வாகனங்களை நிறுத்தும் வகையில், சென்னை முழுவதும் வாகன நிறுத்த மேலாண்மை திட்டங்களுக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

இங்கு, ஒரு மணிநேரத்திற்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கவும், பிரீமியம் வாகன நிறுத்த கட்டணங்களுக்காக, 40 ரூபாய் கட்டணம்

வசூலிக்கவும் முடிவு

செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், 378 இடங்களில் மிதிவண்டி பகிர்ந்து பயன்படுத்தும் திட்டத்தில், நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், 5,000 மிதிவண்டிகள் கொள்முதல் செய்யப்படும். மக்களின் வரவேற்பை பொறுத்து, மிதிவண்டிகள் மேலும் அதிகரிக்கப்படும்.

தி.நகர் பகுதியில் மட்டும், 1,900 கட்டடங்களில், சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தவும், இதன் மூலம், ஐந்து மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 25 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக பூங்கா, தி.நகரில், 5.5 கி.மீ., நீளத்திற்கு, 9.37 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் திட்டம், 210 கோடி ரூபாய் செலவிலான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகிய திட்டங்களுக்கும் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மின் வாரியம் சார்பில், 12 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, 9.5 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளன.

சென்னை குடிநீர் வாரியம், தி.நகரில் குடிநீர் வழங்கும் அளவை துல்லியமாக கணக்கிட, 251 இடங்களில், 11.63 கோடி ரூபாய் செலவில், ஸ்மார்ட் மீட்டர் அமைக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, தி.நகர் பகுதிகளில், 7.98 கோடி ரூபாய் செலவில், தெருவிளக்குகளை கண்காணிக்கும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த

உள்ளது.

ஒட்டுமொத்தமாக, 300 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு, ஒப்பந்தம் கோரவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை துவங்கவும் துறை அதிகாரிகளுக்கு, உயர்மட்ட குழு

அறிவுறுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.