கோவில் குட்டையில் குப்பை, கழிவுநீர் தேக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2017
00:04

பம்மல் : பொழிச்சலுார், கள்ளியம்மன் கோவில் குட்டையில், குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னை, பம்மலை அடுத்த பொழிச்சலுார் ஊராட்சியில், கள்ளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே, 40 ஆண்டுகளாக இருந்த குட்டை, பராமரிப்பில்லாததால் சீரழிந்து கிடக்கிறது. மேலும் இந்த குட்டை, கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. மழை பெய்யும் போது, வெள்ளத்தில் அடித்து வரப்படும், குப்பை கழிவுகள், அருகேயுள்ள, ஜே.ஜே.நகர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது. இதனால், துர்நாற்றம், கொசு தொல்லை அதிகமாகி, மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில், வடிகால் அமைக்கப்படாததால், சாலையிலேயே கழிவுநீர் ஓடுகிறது. கோவில் குட்டையை துார்வாரி, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

பல்லாவரம் எம்.எல்.ஏ., இக்குட்டையை பார்வையிட்டு, துார்வார நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்ததார். பின், எந்த நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பராமரிப்பற்ற நிலையில் உள்ள, குட்டையை சீரமைக்கவும், இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.