மணல் தட்டுப்பாட்டால் பல்லாவரம்- மேம்பால பணியில் தொய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 நவ
2017
00:38

பல்லாவரம் : பல்லாவரம் -- குன்றத்துார் சாலையில், பல ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணி, மணல் தட்டுப்பாட்டால் தொய்வடைந்துள்ளது. இதனால் மேம்பாலத்தை திட்டமிட்ட காலத்திற்குள், பயன்பாட்டிற்கு திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம்- குன்றத்துார் சாலை, பழைய சந்தை சாலை, வெட்டர் லைன் ஆகிய, மூன்று சந்திப்புகளை தினசரி, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இதனால், 'பீக் அவர்', நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 68.86 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.

ஒரு வழி வடிவில் அமையும், இந்த மேம்பாலத்தின் நீளம், 1.4 கி.மீ., ஆகும். மொத்தம் மூன்று கட்டங்களாக இப்பணி நடைபெறுகிறது.இம்மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், ஜி.எஸ்.டி., சாலையில், மூன்று சந்திப்புகளில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். முதல்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில் பணிகள் துவங்கின. இதுவரை, 50 சதவீதம் பணிகள் கூட முடியவில்லை. அதற்குள் மணல் தட்டுப்பாடு காரணமாக மேம்பால பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர், சந்தானம் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில், நெடுஞ்சாலைத் துறையினர், இதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரவேண்டிய இந்த மேம்பாலம் திட்டமிட்டப்படி முடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்மேம்பாலத்திற்காக, இதுவரை, 18 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மணல் தட்டுப்பாட்டால் தான் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணியை வேகப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறோம். அடுத்த வாரம் முதல் வழக்கம்போல் பணி தொடரும்,' என்றனர்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.