சென்னை: மின் வாரிய அலுவலகத்தில் நேற்று, தொலைபேசி சேவை முடங்கியது.
சென்னை, அண்ணா சாலையில், மின் வளாகம்உள்ளது. அங்கு, மின் வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், மின் தொடரமைப்பு அலுவலகம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.தற்போது, மின் வளாகத்தில், 10 மாடி கட்டட தலைமை அலுவலகத்திற்கு, இணைப்பு கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, மின் வளாகத்தில்கட்டுமான பணிக்காக, பள்ளம் தோண்டிய போது, தொலைபேசி, 'கேபிள்'கள் பழுதாகின.இதனால், தலைமை அலுவலகம் தவிர்த்த மற்ற கட்டடங்களில், தொலைபேசி சேவை முடங்கியது.
இது குறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறிய தாவது:இணைப்பு கட்டட கட்டுமான பணி, சரியாக திட்டமிடாமல் நடக்கின்றன; அதிகாரிகள், தங்கள் வாகனங்களை இஷ்டத்திற்கு நிறுத்துவதால், இட நெருக்கடி நிலவுகிறது.இதனால், அலுவலகத்திற்குள் நடக்கவே சிரம மாக உள்ளது. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம், தொலைபேசி கேபிளை பழுதாக்கியதால், அதிகாரிகள், தங்களுக்குள் பேசி கொள்ளும், 'இன்டர்காம்' மற்றும் வெளிநபர்களுடன் பேசும், 'லேண்ட் லைன்' சேவை பாதிக்கப்பட்டது.இதேபோல், மின்சார கேபிளையும், அடிக்கடி பழுதாக்குவதால், 10வது மாடி தவிர்த்த மற்ற தளங்களில், மின் தடையும் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.