போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 நவ
2017
02:32

விபத்தில் பலி: அவிநாசி, காசிக்கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., கிளை செயலாளர் செந்தில்குமார், 38. பந்தல் காண்ட்ராக்டர். நேற்று, வஞ்சிபாளையத்தில் பந்தல் அமைக்கும் பணி முடிந்து, தனது பைக்கில் அவிநாசி திரும்பினார். <உமையஞ்செட்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த கார், அவரது பைக் மீது மோதியது. படுகாயமடைந்த அவர், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

வேன் திருட்டு: தஞ்சையை சேர்ந்தவர் இளையராஜா, 33. திருப்பூர், சந்திராபுரத்தில் வசிக்கிறார். சொந்தமாக சரக்கு வேன் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். அரசு மருத்துவமனை அருகே நிறுத்தியிருந்த அவரது வேனை காணவில்லை. தெற்கு போலீசில் புகார் செய்தார். வேன் திருடு போன அதேநாளில், பல்லடம் அருகே, ஒரு நிறுவனத்தில் முதியவரை கொன்று, சரக்கு வேனில் வந்த கும்பல், பனியன் துணிகளைத் திருடி சென்றுள்ளது. அவரது வேன், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

தீ விபத்தில் பெண் பலி: பொங்கலூர் திருமலைநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியின் மனைவி பத்மாவதி, 23. தம்பதியருக்கு ஒன்றரை வயதில், ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 11ல், வீட்டில், எதிர்பாராதவிதமாக பத்மாவதியின் சேலையில், மண்ணெண்ணெய் பட்டு, தீ பிடித்தது. பலத்த தீக்காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாடு திருடிய நபர் கைது: பொங்கலூர் காந்தி நகரை சேர்ந்தவர் அய்யப்பன், 70. இவருக்கு சொந்தமான மாட்டை, வீட்டருகே உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். கடந்த, 12ல், இவரது மாட்டை காணவில்லை. இது குறித்து அவர் அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே, இடுவாய் அருகே ஒரு நபர், மாட்டை ஏற்றிச் செல்ல ஆட்டோ கேட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதியினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில், மாட்டை திருடியது, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார், 30 என்று தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, மாட்டை மீட்டனர்.

தொழிலாளி மாயம்: திருவாரூரை சேர்ந்தவர் சங்கர், 33. இவர், முருகம்பாளையம் பகுதியில் தங்கி, பிரிண்டிங் பட்டரையில் வேலை செய்து வந்தார். சங்கரின் வீட்டில் இருந்து பெற்றோர் அழைத்து உள்ளனர். ஆனால், மொபைல் போன், "சுவிட் ஆப்' ஆக இருந்துள்ளது. சந்தேகமடைந்த பெற்றோர், சங்கரை நண்பர், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்; கிடைக்க வில்லை. புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கால்வாயில் விழுந்து பலி: திருப்பூர், வீரபாண்டி பிரிவு போலீஸ் செக் போஸ்ட் அருகே சுற்றித்திரிந்த, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒரு வர், ரோட்டின் ஓரத்தில் இருந்த சாக்கடை கால்வாயில், மதுபோதையில் கீழே விழுந்து, மயங்கி, இறந்து கிடந்தார். சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு, போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து, வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X