போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 நவ
2017
02:45

பைக் மோதி முதியவர் பலி: திருப்பூர் - பள்ளபாளையத்தை சேர்ந்தவர் கணபதி, 70. இவர் அப்பகுதியில் ரோட்டில் நடந்து சென்றார். அவ்வழியே சென்ற பைக், கணபதி மீது மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டு, கோவை தனியார் மருத்துவ

மனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது, உயிரிழந்தார். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விஷம் குடித்து வாலிபர் பலி: திருப்பூர், சாமுண்டி

புரம், பாலதண்டாயுதபாணி வீதியை சேர்ந்தவர்

சஞ்சய்குமார், 32. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. குடிப்பழக்கம் இருந்ததால், சஞ்சய்குமாரை குடிக்கக்கூடாது என்று குடும்பத்தினர் அறிவுறுத்தினர். மனமுடைந்த அவர், கடந்த, 12ல், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

15 வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பொருள் பறிமுதல்: திருப்பூர் மாநகர

எல்லைக்கு உட்பட்ட கே.வி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், நல்லூர் பகுதி பெட்டிக் கடை, பேக்கரி

களில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா விற்று வந்தது தெரிய வந்தது. அருண்குமார், 32, சங்கர்குமார், 26, வேலுசாமி, 57, ஆறுமுகம், 56, சுசீலா, 63, ஆகிய, ஐந்து பேரை கைது செய்து, 246 பாக்கெட் பான்பராக்கை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் தற்கொலை: சேவூர், பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 20. சில நாளாக

மனநிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில், வீட்டில் விஷமருந்தி, அவர் மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கோவை

அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

விவசாயி தற்கொலை: வெள்ளகோவிலை சேர்ந்த மணியின் மகன் மூர்த்தி, 23. இவர், பொங்கலூர் காட்டூர் புதூரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் தோட்டத்தில் தங்கி, விவசாய வேலை

செய்து வந்தார். குடிப்பழக்கம் இருந்ததால், குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால், மனமுடைந்த மூர்த்தி, 15ம் தேதி விஷம் குடித்தார். அருகில் இருந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி மோதி ஒருவர் பலி: குண்டடத்தை சேர்ந்தவர் நாகராஜன், 34. இவர், தனது பைக்கில், குண்டடம் - ஊதியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதி, காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X