போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 நவ
2017
01:47

தீ பிடித்து இளம்பெண் பலி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பினட்டி பேகரா, 40. இவரது மகள்

கீதாஞ்சலி பேகரா, 16. இவர்கள் பாரப்பாளையத்தில் தங்கி வசித்து வருகின்றனர். 15ம் தேதி பினட்டி பேகரா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில்

இருந்த கீதாஞ்சலி சமையல், செய்ய கொசின் ஸ்டவ்வை பற்ற வைத்து பம்ப் செய்தார். திடீரென ஆடையில் தீ பிடித்து எரிந்து காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கீதாஞ்சலி இறந்தார். வடக்கு போலீசார்

விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி மாயம்: திருப்பூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் மாரிசாமி, 35; பனியன் தொழிலாளி. கடந்த 12ம் தேதி கடைக்கு சென்று வருவதாக

கூறி வீட்டை விட்டு மாரிசாமி வெளியே சென்றார்.

வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதியவர் தற்கொலை: காங்கயம், சிவன்மலை

பஸ் ஸ்டாப் அருகேயுள்ள ஒரு மரத்தில், 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தூக்கு மாட்டி இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காங்கயம் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தூக்கில் சடலமாக தொங்கியவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை.

வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி: காங்கயம், திருப்பூர் ரோட்டை சேர்ந்தவர் குருசாமி, 55. சின்னப்புதூர் பிரிவு அருகே ரோட்டில் நடந்து சென்ற அவர் மீது அவ்வழியே சென்ற ஒரு சரக்கு வேன், மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்த அவர் கோவை தனியார் மருத்துனமனையில் சிகிச்சை

பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X