மூன்று தேசிய நெடுஞ்சாலைகளிலும் அமைகிறது மேம்பாலசாலை!நெரிசல் இல்லா போக்குவரத்திற்கு புது கட்டமைப்பு:  79 கி.மீ., நீள திட்டத்திற்கு அறிக்கை தயாரிப்பு தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

05 டிச
2017
04:48
பதிவு செய்த நாள்
டிச 05,2017 04:13

சென்னையில் நகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள், நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, சென்னை - திருச்சி, சென்னை - கோல்கட்டா, சென்னை- பெங்களூரு ஆகிய, மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளிலும், 79 கி.மீ., நீளத்திற்கு, மேம்பால சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.


சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு முக்கிய சந்திப்புகளில், மாநில நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.மேலும், சாலை விரிவாக்கம், புதிய சாலை கட்டமைப்புக்கள் ஆகியவையும் உருவாக்கப்பட்டு வருகின்றன.


தாமதம்


கிண்டி - மாதவரம் நுாறடிச்சாலை, பெருங்களத்துார் - புழல் சென்னை புறவழிச்சாலை, வேளச்சேரி, 'பை -- பாஸ்' சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்ட சாலை, கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை ஆகிய, புதிய சாலை கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இருப்பினும், நாளுக்குநாள் அதிகரிக்கும் வாகனங்கள், சரக்கு போக்குவரத்து ஆகியவை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது.இதனால், சென்னையில்இருந்து வெளியேறும் சரக்கு மற்றும் பயணியர்வாகனங்கள், பல மணி நேரம் தாமதமாக செல்கின்றன. வார இறுதி நாட்களில், வெளியூர் செல்லும் பயணியரால், இந்த நெரிசல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.


கிடப்பில்


இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை - திருச்சி, சென்னை - கோல்கட்டா, சென்னை - பெங்களூரு ஆகிய மூன்று தேசிய நெடுஞ்சாலைகளிலும், மேம்பால சாலை அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, மேம்பால சாலை அமைப்பதற்கு, முந்தைய தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது.கடந்த 2009ல், துவங்கிய இப்பணிகள், 2011ல் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மீண்டும் துவங்குவதற்கான ஏற்பாடுகள், தற்போது நடக்கின்றன.


மதுரவாயல் வரை மட்டுமே இருந்த, இந்த மேம்பால சாலை, தற்போது பூந்தமல்லி வரைநீட்டிக்கப்பட உள்ளது.இதனால், துறைமுகம் முதல் பூந்தமல்லி வரை, 35 கி.மீ., நீளத்திற்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மத்தியிலும், கூவம் ஆற்றின் கரையிலும் துாண்கள் அமைத்து, மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளன.


ஒதுக்கீடு


ஏற்கெனவே, அமைக்கப்பட்ட துாண்கள் இல்லாமல், மதுரவாயல் முதல் பூந்தமல்லி வரை புதிதாக துாண்கள் அமைக்கப்பட உள்ளன.இந்த திட்டத்திற்கு மட்டும், 1,000 கோடி ரூபாயை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.அதேபோல, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை, மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது.


தாம்பரம் - கூடுவாஞ்சேரி - மறைமலை நகர் - சிங்கபெருமாள் கோவில் வழியாக மொத்தம், 33 கி.மீ., நீளத்திற்கு, ஜி.எஸ்.டி.,சாலையின் மையத்தில், இதற்கு துாண்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த திட்டத்திற்கு ஏற்கனவே, ஆணையம் விரிவான அறிக்கை தயாரித்த நிலையில், தற்போது, திருத்திய திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் நல்லுார் சுங்கசாவடி வரை, மொத்தம், 11 கி.மீ., நீளத்திற்கு, மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது.


வரவேற்பு


இச்சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருந்தது.ஆனால், இதற்கான திட்ட மதிப்பீட்டை விட, நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு அதிகமாக இருந்தது.இதை கருத்தில் கொண்டு, இச்சாலையிலும், மேம்பால சாலை அமைத்தால், நிலம் கையகப்படுத்தும் செலவு, தவிர்க்கப்படும் என, ஆணையம் முடிவு செய்துள்ளது.


இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, தயாரிப்பு பணிகளும் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், இந்த நெடுஞ்சாலைகளிலும், சென்னை நகரின் இதர பிரதான சாலைகளிலும், சரக்கு மற்றும் பயணியர் வாகன போக்குவரத்தால், ஏற்படும் நெரிசலை கணிசமாக குறைக்க முடியும்.

சென்னை நகரின் போக்கு வரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- நமது நிருபர் -


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanghimangi - Mumbai,இந்தியா
06-டிச-201712:28:21 IST Report Abuse
Sanghimangi மேம்பாலங்கள் என்றுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஆகாது. சந்திப்புகளில் மட்டுமே இவை சற்று பயன் தர கூடியவை. ஆகவே, நீண்ட மேம்பாலங்களை விடுத்து, சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
05-டிச-201714:50:33 IST Report Abuse
vasu விலை நிலங்கள் பாதிப்பு இல்லாமலும்., பழைய புராதன (ஹெரிடேஜ் ) பாதுகாக்கவும் , இது நல்ல முறை. அரசுக்கு நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
Truth Teller - chennai,இந்தியா
05-டிச-201712:43:30 IST Report Abuse
Truth Teller இது ஒரு முக்கியமான செய்தி ..அதை இப்படி side news போல போட்டால் எப்படி மக்கள் முக்கியத்துவம் தருவார்கள் ?? In democracy if people not give importance then govt wont give importance either... This is more important than the RK Nagar
Rate this:
Share this comment
Cancel
Madhav - Chennai,இந்தியா
05-டிச-201711:19:54 IST Report Abuse
Madhav பொது போக்குவரத்திற்கு மெட்ரோ, மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு புகை வண்டிகள் என்பதே சரியான தீர்வு, மற்றவை எல்லாம் யாரோ கொள்ளை அடிப்பதற்கான திட்டங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.