மருத்துவமனை, பள்ளி, கோவில் நடுவே, 'டாஸ்மாக்':போராட்டத்திற்கு தயாராகும் ஈஞ்சம்பாக்கம் மக்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2017
04:19


ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனை, கோவில் ஆகியவற்றின் நடுவே, 'டாஸ்மாக்' கடை திறப்பதற்கு, பகுதிவாசிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனை முழுமையாக அகற்றும் வரை, தொடர் போராட்டத்தில்ஈடுபட உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது ஈஞ்சம்பாக்கம். அங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன.

எதிர்ப்பு

கடந்த மாதம், ஈஞ்சம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவில், திடீரென டாஸ்மாக் கடை ஒன்று உருவானது. கடையின் 500 மீட்டர் தொலைவிற்குள் இரண்டு பள்ளிகள், மருத்துவமனை, கோவில் ஆகியவை அமைந்துள்ளது.

டாஸ்மாக் கடை வந்த அடுத்த நாளே, அங்கு செல்லும் குடிமகன்களால் பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையின் அருகில் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவரால், பார் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இது தெரியவந்ததும், அவரின் காரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தற்காலிமாக அக்கடை மூடப்பட்டுள்ளது. இருப்பினும், பார் வசதியுடன் அக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள், மறைமுகமாக நடந்து வருகின்றன.

ஆனால், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக பகுதிவாசிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:

தமிழகத்தில், படிப்படியாக டாஸ்மாக் கடைகள்குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியுடன், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, சமீப காலமாக புதிய டாஸ்மாக் கடைகளை, புற்றீசலாக ஆங்காங்கே திறந்து வருகிறது.

சிறைபிடிப்பு

இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் குப்பத்தை சேர்ந்த மதியழகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், டாஸ்மாக் கடை கடந்த மாதம் திறக்கப்பட்டது.

இதனால், அ.தி.மு.க., பிரமுகரின் காரை நாங்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.ஆனால், அவர்களை தாக்க முயன்றதாக, போராட்டத்தில் எங்களுடன் ஈடுபட்ட சிலர் மீது, நீலாங்கரை காவல் நிலையத்தில் பொய் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

கடை திறந்த இரண்டு நாட்களும், நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தோம். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார், மதுக்கடை நடத்துவதற்கு ஆதாரவாக செயல்படுகின்றனர்.

இங்கு, ஏராளமான பெண் குழந்தைகள் உள்ளனர், பல நேரங்களில் பெண்கள் தனியாக இருக்கின்றனர். இந்த பகுதியில் டாஸ்மாக் நடத்தினால், பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். அதுவரை நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பகுதியில் கோவில், பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனை உள்ளன. அதன் அருகில், அரசின் விதிமுறைக்கு புறம்பாக டாஸ்மாக் கடை திறப்பதை, ஏற்க முடியாது. எங்கள் உயிரை கொடுத்தாவது அந்தக் கடையை அகற்றுவோம்.

மாரியம்மாள்

இரண்டு நாள் கடை திறந்தபோதே, பெண்களால் வெளியே செல்ல முடியவில்லை. சாலையில் எங்கு பார்த்தாலும் பாட்டில் துண்டுகள். அரை நிர்வாணமாக, சாலையில் குடிமகன்கள் அட்டகாசம். தயவு செய்து அந்த

கடையை நிரந்தமாக அங்கிருந்து அகற்ற வேண்டும்.


முனியம்மாள்

கங்கையம்மன் கோவில் தெருவில், ஏராளமான மாணவியர், பெண்கள் உள்ளனர். பெரும்

பாலான நேரங்களில் தனியாக இருக்க வேண்டிய

சூழல் உள்ளது. இரண்டு நாட்கள் டாஸ்மாக் திறந்தபோதே, குடிமகன்கள் கதவை தட்டி, தண்ணீர் கேட்பதுபோல, அநாகரிகமாக நடந்து கொண்டனர். நிரந்தரமாக வந்து விட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் எனவே, அந்த டாஸ்மாக் கடையை

நிரந்தரமாக மூடும் வரை, தொடர்ந்து போராடுவோம்.


தேவி- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.