சரித்திரம் படைத்த இயற்கை நார் நெசவு முடக்கம் அன்று சாதனை... இன்று சோதனை...!அரசின் பாராமுகத்தால் அழிவை நோக்கி பயணம் -முதல்வர் பழனிசாமி தனி கவனம் செலுத்துவாரா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 டிச
2017
01:48

-- நமது நிருபர் -


இயற்கை நார் ஆடைகள் உற்பத்தியில் சரித்திரம் படைத்து, லண்டன், அமெரிக்கா வரை, தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு அனுப்பி அசத்திய, அனகாபுத்துார் இயற்கை நார் நெசவாளர்கள், மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தால், இன்று அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த தொழிலை மேம்படுத்த, முதல்வர் பழனிசாமி, தனி கவனம் செலுத்துவாரா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்பு பெற்ற காஞ்சிபுரத்திற்கு, மற்றொரு பெருமை நெசவுத் தொழில். மாவட்டத்தின் பிரதான தொழிலாக, நெசவு இருந்து வருகிறது.

இந்த மாவட்டத்தின், சென்னையை ஒட்டிய பகுதிகளில், சில ஆண்டுகளில், வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆடைகள் உற்பத்தியில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் களம் இறங்கிய நிலையில், இன்னமும் பாரம்பரிய முறையில், நெசவுத் தொழிலை, ஆங்காங்கே செய்து கொண்டு

இருக்கின்றனர்.

இதில், அனகாபுத்துார் என்ற பகுதியில், நெசவாளர் கள், பாரம்பரிய நெசவுத் தொழிலை, பழமை மாறாமல், தற்போதும் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இயற்கை நார் நெசவு தொழிலில், 15 ஆண்டுகளாக புரட்சி செய்து வரும், அனகாபுத்துார் நெசவாளர்கள், இதுவரை இயற்கை நார் நெசவில், 25 வகையான இயற்கை நார்களில், பல வகையான ஆடைகளை உற்பத்தி செய்துள்ளனர்.

லண்டன்

ஆரம்பத்தில், சணலில் இருந்து புடவை, சட்டை உற்பத்தி செய்தவர்கள், அவைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தொழிலை விரிவுபடுத்தினர்.

வாழை நார், மூங்கில், கற்றாழை, வெட்டிவேர், அண்ணாச்சி பழம் என,

25 வகையான, இயற்கை நார்களின் இருந்து புடவை, சட்டை, பேன்ட், கைப்பை...

'பர்ஸ்' ஆகியவற்றை உற்பத்தி செய்து, தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளிலும் விற்பனைக்கு அனுப்பினர்.

ஆடை கண்காட்சிகளில், இவர்களின் உற்பத்திக்கு விருது கிடைத்தது மட்டுமின்றி, 'லிம்கா' சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தனர்.

இவர்களின் தொழிலை மேம்படுத்த, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிறுவனம் உதவி செய்ய முன்வந்தும், மாநில அரசு முன்வரவில்லை.

இயற்கை நார் நெசவு தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுக ளாக, இந்த தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கை, கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வருகிறது.

இந்த தொழிற்கூடம் அமைக்க, அரசு இதுவரை இடம் ஒதுக்கவில்லை.

இந்நிலையில், இத்தொழிலில் ஈடுபட்டு வந்த, 100 குடும்பத்தினர், அடையாற்றங்கரை ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக, பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

தற்போது, 10 கைத்தறிகள் மூலம் மட்டுமே, இயற்கை நார் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் பெருமை சேர்த்து வந்த, இயற்கை நார் நெசவுத் தொழில், முற்றிலுமாக முடங்கும் நிலைக்கு வந்து விட்டது.

இது குறித்து, இயற்கை நார் நெசவு குழும தலைவர், சேகர் கூறியதாவது:

இயற்கை நார் நெசவு உற்பத்தி கூடத்திற்கு, இடம் ஒதுக்கி தருமாறு, எத்தனையோ முறை அலைந்துவிட்டோம்.

எதற்காக, எங்களை புறக்கணக்கின்றனர் என்றே தெரியவில்லை.

கடந்த 2015 வெள்ளத்தில், நெசவாளர்களின் கைக்கறி வீணானது. அப்போது, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, இயந்திர கைத்தறியை வழங்கியது.

அதை பயன்படுத்த

முடியாமல், மக்கி கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், இங்குள்ள நெசவாளர்கள், பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

பெருமை

இந்த நிலையிலாவது, தொழிற்கூடம் அமைக்க, மாநில அரசு இடம் ஒதுக்கி கொடுத்தால், இத்தொழிலை காப்பாற்ற முடியும்.

இன்னும் பல ஆடைகளை உற்பத்தி செய்ய வழிவகுக்கும். இதன் மூலம், நம் மாவட்டத்திற்கு இன்னும் பெருமை கிடைக்கும். வேலைவாய்ப்பும் பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரம்பரியமிக்க நெசவுத் தொழிலை மேம்படுத்த, முதல்வர் பழனிசாமி, தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே, தற்போது நெசவாளர்களின் எதிர்பார்ப்பு.


பிரதமர் அணிந்தும் பயனில்லை

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், 2015ல், தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக, அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு

குழுமத்தினர், 'மூலிகை சால்வை' ஒன்றை உற்பத்தி செய்தனர். நிகழ்ச்சியில், பிரதமருக்கு அந்த சால்வை அணிவிக்கப்பட்டது.

இது, இயற்கை நார் நெசவாளர்களுக்கு கிடைத்த இன்னொரு பெருமையாகும். ஆனாலும், இயற்கை

நார் நெசவுத் தொழிலை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் யோசிக்காதது, நெசவாளர்களுக்கு

வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
06-டிச-201717:40:24 IST Report Abuse
Murugan விரைவில் வருவார்கள் இப்பொழுதுதான் இயற்கை உணவை தேடி அலைகிற கூட்டம் ஆரம்பித்து விட்டது .தோல் வியாதிகளும் ஏற்படுவதை தடுக்க ,இயற்கை நாரில் செய்யப்பட்ட துணிகளை பயன்படுத்துங்கள் என ஒரு மருத்துவர் கூறினாலேதான் நம் மக்களுக்கு புரியும் அதன் மகிமை .அதுவரை கண்ட மேல் நாட்டு மோகத்தில் அந்நிய துணிகளை, தேடி அலையும் கூட்டத்திற்க்கு ஒரு சவுக்கடியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-201717:22:46 IST Report Abuse
Sriram V These industries must make use of Mudra scheme to take the loans and set up the industry as a cooperative company.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
06-டிச-201707:17:26 IST Report Abuse
Rajendra Bupathi நல்ல கமிக்ஷன் கிடைச்சாதான் எவனும் அதை பத்தி யோசிப்பான்? என்ன பன்ணுறது பைந்தமிழ் திராவிட கட்சிகளின் நிலைமை அப்படிதான் இருக்கிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X