கமிஷன் குறைவால் எல்.பி.ஜி., விற்பனை செய்ய... ஆர்வமில்லை! கூடுதல் மையம் திறக்க அதிகாரிகளும் தயக்கம் ?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:00குறைந்த விலை, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு, சப்தமில்லா பயணம் என, எல்.பி.ஜி., ஆட்டோக்களை இயக்குவதால், பல்வேறு நன்மைகள் உள்ள


நிலையில், சென்னையில், எல்.பி.ஜி., நிரப்பும் மையங்கள் குறைவாக இருப்பதால், ஆட்டோ ஓட்டுனர்கள் தவிக்கின்றனர். கமிஷன் குறைவு என்பதால்,


பெட்ரோல், 'பங்க்' உரிமையாளர்களும், எல்.பி.ஜி., மையம் அமைக்க ஆர்வம் காட்டவில்லை. அனைத்து வாகனங்களும், எல்.பி.ஜி.,க்கு மாறினால் தான்,


கூடுதல் எல்.பி.ஜி., நிரப்பும் மையங்கள் அமைக்கப்படும் என, எண்ணைய் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஆட்டோக்கள், ஆரம்ப காலம் முதலே, பெட்ரோலில் இயங்கி வருகின்றன. ஆட்டோவின், இன்ஜின் செயல்பாடு குறையாமல் இருக்க,


ஒரு லிட்டர் பெட்ரோல் உடன், 50 மி.லி.,


ஆயில் கலந்து போடப்படுகின்றன.


1.5 லட்சம் ஆட்டோ


இதனால், ஆட்டோவில் இருந்து, அதிக


புகை வெளியேறி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.


இதையடுத்து, பெட்ரோலுக்கு மாற்றாக, எல்.பி.ஜி., எனப்படும், திரவ நிலை எரிவாயுவில் இயங்கும், ஆட்டோக்களை பயன்படுத்துமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை, மத்திய அரசு


வலியுறுத்தியது.


சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில், எல்.பி.ஜி., மற்றும் பெட்ரோல் என, இரண்டு எரிபொருளிலும், இயங்கும் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.


அதில், பெட்ரோல் டேங்க் கொள்ளளவு தான் அதிகம் இருந்தது.


பெட்ரோல் விலையை விட, இயற்கை எரிவாயுவின் விலை அதிகமாக இருந்ததால், ஆட்டோ


ஓட்டுனர்கள் பலரும், பெட்ரோல் பயன்


படுத்தினர்.


இந்நிலையில், வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்தும் வகையில், அதிகம் புகைக்காத, 'பி.எஸ்., - 4' வாகனங்களை மட்டும் விற்குமாறு, சுப்ரீம் கோர்ட்


உத்தரவிட்டது.


இது, கடந்த ஏப்ரல் மாதம் முதல், அமலுக்கு வந்தது. ஆட்டோ தயாரிப்பு


நிறுவனங்களும், எல்.பி.ஜி., யில் இயங்கும், ஆட்டோக்களை


மட்டுமே, தற்போது


விற்பனை செய்கின்றன.


அதில், சராசரியாக, 2 லிட்டர் கொள்ளளவுக்கு பெட்ரோல் டேங்க்; 20 லிட்டர் கொள்ளளவுக்கு, எல்.பி.ஜி., நிரப்பும்


வசதி செய்யப்பட்டு உள்ளன.


வாகனம் ஓட்டும் போது, எல்.பி.ஜி., தீர்ந்து விட்டால் மட்டும், அவசர தேவைக்கு, ஆட்டோவை இயக்க, பெட்ரோல்


வசதியை, பயன்படுத்த


வேண்டும்.


தற்போது, சென்னை மற்றும் புறநகரில், சராசரியாக, 1.50 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. அதில், 50 ஆயிரம் ஆட்டோக்கள், எல்.பி.ஜி.,யில் ஓடக்கூடியது.


எல்.பி.ஜி., ஆட்டோக்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, சென்னையில் எல்.பி.ஜி., நிரப்பும் மையங்கள் குறைவாக உள்ளதால், ஆட்டோ ஓட்டுனர்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


சென்னையை பொறுத்த வரை, ஒட்டுமொத்தமாகவே, 30 முதல் 40 வரையிலான, எல்.பி.ஜி., நிரப்பும் மையங்களே உள்ளன.


இதனால், எல்.பி.ஜி., நிரப்பும் மையங்கள் உள்ள பெட்ரோல் பங்குகளில், அனுமார் வால் போல, ஆட்டோக்கள், சாலையோரம் அணிவகுத்து


நிற்கின்றன.


இதனால், எல்.பி.ஜி., நிலையங்கள் உள்ள சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


அதுமட்டுமின்றி, வரிசையில் நிற்கும் நேரத்தை மிச்சப்படுத்த, பெட்ரோல் ஊற்றியே, ஆட்டோக்களை இயக்கும் முடிவுக்கு, ஆட்டோ ஓட்டுனர்கள் தள்ளப்படுகின்றனர்.


இதனால் சுற்றுச்சூழல், இன்னும் மோசமாகுமே தவிர, மேம்படாது.


சென்னை முழுவதும், கூடுதல் எல்.பி.ஜி., மையங்களை, எண்ணைய் நிறுவனங்கள் அமைத்தால், ஆட்டோக்கள் காத்திருக்க வேண்டிய


அவசியம் ஏற்படாது.


விலை குறைவு


பெட்ரோலை விட, விலை குறைவு என்


பதால், ஆட்டோ ஓட்டுனர்


களுக்கும், எல்.பி.ஜி., வசதியாக அமையும். சுற்றுச்சூழலும்


பாதுகாக்கப்படும்.


இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்,


பெட்ரோல் விற்பதை விட, எல்.பி.ஜி.,யில் கமிஷன் குறைவு என்பதால், எல்.பி.ஜி., நிரப்பும் மையம் அமைக்க, பெட்ரோல் 'பங்க்' உரிமையாளர்கள் ஆர்வம் காட்டு


வதில்லை.


அவர்களுக்கு சாதகமாக, எண்ணைய் நிறுவன அதிகாரிகளும், கூடுதல் எல்.பி.ஜி., மையங்களை அமைக்க, தற்போதைக்கு தயாரில்லை.


இதற்கு, அனைத்து வாகனங்களும், எல்.பி.ஜி.,க்கு மாறினால் தான், கூடுதலாக மையங்கள் தேவைப்படும் என, எணணைய் நிறுவன அதிகாரிகள் வித்தியாசமான காரணங்களை கூறுகின்றனர்.


'முன்னுரிமை கொடுக்கிறோம்'


ராயப்பேட்டை, கீழ்பாக்கம், கோயம்பேடு, மீனம்பாக்கம் உட்பட, 40க்கும் குறைவான இடங்களில் தான், ஆட்டோ 'காஸ்' நிரப்பும் மையங்கள் உள்ளன. ஒவ்வொன்றும், பல கி.மீ., துாரத்தில் உள்ளன. இதனால், ஒவ்வொரு மையத்திலும், 'காஸ்' நிரப்ப, ஆட்டோக்கள், பல மணி நேரம், வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. பெட்ரோல் விலையில், தினசரி மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது, பெட்ரோல் விலையை விட, எல்.பி.ஜி., விலை குறைவு. எல்.பி.ஜி.,யில் ஓட்ட முன்னுரிமை கொடுக்கிறோம். அதிக காஸ் நிரப்பும் மையங்களை துவக்கினால் நல்லது.


ஆட்டோ ஓட்டுனர்கள்

அதிகாரிகள் சொல்வது என்ன?


கார், பைக் போன்ற மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும் போது, சென்னையில் ஆட்டோக்கள் எண்ணிக்கை குறைவு தான். தற்போதுள்ள ஆட்டோக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 'காஸ்' நிரப்பும் மையங்கள் உள்ளன. அனைத்து


வாகனங்களும், எல்.பி.ஜி.,க்கு மாறும் போது,


கூடுதலாக மையங்கள் துவக்கப்படும்.


எண்ணைய் நிறுவன அதிகாரிஎந்த உதவியும் இல்லை!


தனியார் எண்ணெய் நிறுவனங்களும், ஆட்டோ எல்.பி.ஜி., 'காஸ்' நிரப்பும் மையங்கள் அமைத்து வருகின்றன. அவை,


முதலீட்டு செலவில், பாதியை ஏற்கின்றன. அதை, 'காஸ்'


விற்பனைக்கான லாபத்தில், பிடித்தம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், எல்.பி.ஜி., மையம் அமைக்கும் முதலீட்டாளர்களை, ஊக்குவிக்க, எந்த உதவியும் செய்வதில்லை. இதனால் தான், அதிகளவில் மையங்கள் இல்லை. எனவே, எல்.பி.ஜி., மையங்களை துவக்கும், 'பங்க்' உரிமையாளர்களை ஊக்குவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், கூடுதல் மையங்கள் அமைக்க ஆர்வம் ஏற்படும்.ரவிசங்கர், தமிழ்நாடு பெட்ரோலியம்


டீலர்ஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்- நமது நிருபர் - 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.