சதுப்பு நிலத்தை பாதுகாக்க, 'டிஜிட்டல்' பலகை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:02

சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள, பறவைகள் குறித்து பொதுமக்கள் அறியவும், சமூக விரோத செயல்கள் குறித்து எச்சரிக்கவும், கைவேலி சந்திப்பில் 'டிஜிட்டல்' தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டி, துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலை மற்றும் வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலை உள்ளது.

வனத்துறை மூலம், சாலை ஓரத்தில், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அரியவகை பறவைகள் படம் மற்றும் விவரத்துடன், இரும்பு பலகைகள் வைக்கப்

பட்டு உள்ளன.மேலும், குப்பை, கட்டட கழிவுகள் மற்றும் கழிவுநீர் கொட்டுவதை தடுக்கவும், பறவைகளை துண்புறுத்துவதை தடுக்கவும், எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன், தரை பகுதி பிடிமானம் இல்லாமல் இருந்த, 30க்கும் மேற்பட்ட இரும்பு பலகைகளை, மர்ம நபர்கள் திருடி

சென்றனர். அங்கு,

மீண்டும் இரும்பு பலகை வைக்கப்பட்டு

உள்ளது.

இந்நிலையில், வேளச்சேரி - தாம்பரம் சாலை, கைவேலி சந்திப்பில், சதுப்பு நிலம் குறித்த, முழு தகவல்கள் அடங்கிய, 'டிஜிட்டல்' பலகை வைக்கப்பட்டு உள்ளது.

அதில், அரியவகை பறவைகள் குறித்த தகவல், எச்சரிக்கை வாசகங்கள், தண்டனை சட்டம்

உள்ளிட்ட விபரங்கள், படமாகவும், எழுத்து

வடிவிலும் தொடர்ந்து 'டிஜிட்டல்' முறையில் ஒளிபரப்பப்படுகிறது.

அடுத்த கட்டமாக, ரேடியல் சாலை மற்றும் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகில், 'டிஜிட்டல்' தகவல் பலகை வைக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X