உடைந்த பீர்க்கன்காரணை ஏரி சீரமைப்பு தண்ணீர் வீணான பின் ஞானோதயம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:02

பீர்க்கன்காரணை ஒரு மாதத்திற்கு முன் உடைந்த, பீர்க்கன்காரணை ஏரியில் இருந்து, ஏராளமான தண்ணீர் வெளியேறிய நிலையில், தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், மணல் மூட்டைகளை அடுக்கி, ஏரிக்கரையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவ

மழையால் நிரம்பிய, பீர்க்கன்காரணை ஏரியில், உடைப்பு ஏற்பட்டு, மழைநீர், ஜி.எஸ்.டி., சாலைக்கு கீழ் உள்ள கால்வாய் வழியாக வெளியேறியது.

ஏரியை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டி உள்ளோர், ஏரியில் மழைநீர் அதிக

மானதை அடுத்து, உடைப்பு ஏற்படுத்தி, நீரை வெளியேற்றினர்.

இந்த ஏரியில் இருந்து வெளியேறிய மழைநீர், இரும்புலியூர் சுரங்கப்பாதை, முடிச்சூர் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் நிரம்பியது.

அந்த பிரதான சாலைகளில், ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியுற்றனர்.

பீர்க்கன்காரணை

பகுதி இளைஞர்கள், சில மாதங்களுக்கு முன்பு, தங்கள் சொந்த செலவில், ஏரியை துார்வாரி,

ஆழப்படுத்தினர்.

நீரை சேமிக்கும் எண்ணத்தில், இளைஞர்கள் உழைத்ததை, மழை நேரத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் அர்த்தமற்றதாக்கினர்.

ஏரி உடைப்பிற்கு

காரணமானவர்கள் மீது, பொதுப்பணித் துறை

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குறிப்பாக, ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், ஏரியில் சேகரமாகி இருந்த மழைநீர், முழுவதுமாக வெளியேறியது.

தற்போது ஒரு மாதம் கழித்து, பீர்க்கன்காரணை ஏரியில் ஏற்பட்ட உடைப்பை, சரி செய்யும் பணிகள் சாவகாசமாக நடைபெற்று வருகின்றன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.