உயிர் பலிக்கு காத்திருக்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில் நாணயம் இல்லாத ஆணையம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:04

பூந்தமல்லி நெடுஞ்சாலை, மரண பள்ளங்

களுடன், உயிர் பலி வாங்க காத்திருக்கும் நிலையில், மழை முடிந்த பின், சீரமைப்பு பணிகள் நடைபெறும் என, நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மெத்தனமாக தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன.

கனரக வாகன போக்குவரத்தும், இந்த சாலையில் அதிகமாக நடக்கிறது.

மதுரவாயல் - - துறை

முகம் மேம்பால சாலை திட்டத்திற்கு, மதுரவாயல் - கோயம்பேடு இடையே, சாலையில், துாண்கள் அமைக்கப்பட்டன.

மாநில அரசு, இந்த திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ததால், பூந்தமல்லி நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டது.

இதனால், இச்சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. திருவேற்காடு -- வானகரம் வரை உள்ள சாலையில், சாலை தடுப்பு ஆங்காங்கே உடைந்து, படுமோசமான நிலையில் உள்ளது.

தற்போது, பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, 90 சதவீதம் படுமோசமான நிலையில் உள்ளது.

குண்டும் குழியுமாக மாறிய சாலையால், தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளிக்குப்பம் சிக்னல், வேலப்பன்சாவடி சிக்னல், வானகரம் சிக்னல் ஆகிய பகுதிகளில்

ஏற்பட்டுள்ள பள்ளங்களால், இந்த நெடுஞ்சாலை, கிராம சாலைகளை விட மோசமாக காணப்

படுகிறது.

இதனால் தொடர்ந்து இச்சாலையில் விபத்துகளும், உயிர்பலியும் நடந்து வருகிறது.
மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை

சீரமைப்பதில், இரு துறையினரும், ஒருவரை ஒருவர் கைகாட்டி, சாலை அமைக்க மறுத்தனர். 2015 ஜூலையில், பொதுநலச்சங்க கூட்டமைப்பினர் சேர்ந்து, சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி, சீரமைப்பு பணியில் இறங்கினோம். போலீசார் தடுத்தனர்.

குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்


மேம்பாலத்தில் ஆபத்து!


சென்னை புறவழிச்சாலை, மதுரவாயல் மேம்பாலத்தில், தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்ல, பாலம் இறங்கும் இடத்தில், பாரம் தாங்காமல், பாலம் உள்வாங்கி, விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல், கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளதால், தற்போது, தடுப்பு சுவர் வரை விரிவடைந்துள்ளது. அதில், கனரக வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பெரும் அதிர்வு ஏற்படுகிறது.சாலையின் நிலை குறித்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பல முறை கடிதங்கள் அனுப்பப்பட்டன. இந்த சாலையில் உள்ள பள்ளங்களை, நாங்களே

கட்டட இடிபாடுகளை கொட்டி சீர்செய்து வருகிறோம். இதற்கு மாதம், 5,000 ரூபாய் செலவாகிறது.போக்குவரத்து போலீசார்
வாலாஜா - வானகரம் இடையே, 93 கி.மீ., உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள சுங்கச்சாவடி மூலம், தினமும், 30 லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். ஆனால், சாலையை சீரமைக்கவில்லை. சுங்கச்சாவடி மூலம், இதுவரை, 200 கோடி ரூபாய், மோசடி நடந்துள்ளதாக, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். மேலும், பூந்தமல்லி காவல் நிலையத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி, பணி அலட்சியத்தால், உயிர் பலிகள் ஏற்படுவதாக புகார்

அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எஸ்.யுவராஜ், தமிழ்நாடு மணல் லாரி சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர்வாலாஜா முதல் மதுரவாயல் வரை, சாலை, 93 கி.மீ., உள்ளது. இந்த சாலையை சீர் செய்ய, 40 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. விரைவில், சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும். மேலும், நான்கு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக

மாற்ற, 2011ல் ஒப்பந்தம் விடப்பட்டது. அந்த ஒப்பந்தம், தற்போது ரத்து

செய்யப்பட்டுள்ளது. விரைவில் புது ஒப்பந்தம் கோரப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி -- நமது நிருபர் - -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.