மாவட்ட முதல்வர் கோப்பை ஹாக்கி செயின்ட் பால்ஸ், ஆர்.வி., அகாடமி சாம்பியன்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:05

சென்னை, எழும்பூரில் நடந்த, மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில், செயின்ட் பால்ஸ் கிளப், பெண்கள் பிரிவில், ஆர்.வி., ஹாக்கி அகாடமி அணிகள் முதலிடம் பிடித்தன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், சென்னையில் நடந்தன. எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், ஹாக்கி

போட்டி நடந்தது.

அதன் ஆண்கள்

பிரிவில், செயின்ட்

பால்ஸ் கிளப், கிரேட்டர்

சென்னை ஹாக்கி

அகாடமி அணிகள் மோதின. அதில், இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின.

பல்வேறு கட்டங்களில், இரு அணிகளின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதனால்,

இரு அணிகளுக்கு

இடையிலான ஆட்டம் விறுவிறுப்புடனும்,

பரபரப்புடனும் சென்றது.

இந்நிலையில், செயின்ட் பால்ஸ் அணி, ஆட்டத்தின் முதல் கோலை அடித்து, முன்னிலை

பெற்றது. கிரேட்டர்

சென்னை அணியின் கோல் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

போட்டியின் முடிவில், செயின்ட் பால்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில், கிரோட்டர் சென்னை ஹாக்கி சங்கத்தை

தோற்கடித்தது.

அதில், வாடிப்பட்டி ராஜா ஹாக்கி அகாடமி

அணி, மூன்றாவது இடத்தை பிடித்தது.

பெண்கள் பிரிவு போட்டியில், ஆர்.வி., ஹாக்கி அகாடமி அணி, முதலிடத்தை பிடித்தது. அகர்வால் வித்யாலயா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், ஸ்டெல்லா மேரி கல்லுாரி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.