சாலை விபத்தில் மூளைச்சாவு வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2017
01:12

சென்னை, சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட வாலிபரின், உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.சென்னை, மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 37; மீன் பண்ணை நடத்தி வருகிறார். இவருக்கு ஆனந்தி, 28, என்ற மனைவியும், ப்ரியதர்ஷன், 7, என்ற மகனும், ஷியானி, 4, என்ற மகளும் உள்ளனர்.ராஜேஷ்குமார், கடந்த, 4ம் தேதி, இருசக்கர வாகனத்தில், தன் நண்பரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பினார்.பாடி பாலம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் துாக்கி வீசப்பட்டார்.தலையில் பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராஜேஷ்குமாருக்கு, நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அவரின் இதயம், சிறுநீரகம், கண்கள், தோல் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு, தேவைப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

இதில், இதயம், தனியார் மருத்துவ

மனைக்கும்; ஒரு சிறுநீரகம், ஸ்டான்லி மருத்துவமனைக்கும்; மற்றொன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டன.

கண்கள், எழும்பூர் மருத்துவமனைக்கும்; தோல், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.