போலீசார் பார்வையில் உள்ள பழைய குற்றவாளிகள்... 14,551 பேர்! பட்டியல் தயாரித்து கண்காணிக்க கமிஷனர் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 டிச
2017
00:44


சென்னையில், போலீசாரின் பார்வையில், 14 ஆயிரத்து 551 பழைய குற்றவாளிகள் உள்ளனர். காவல் மாவட்டவாரியாக, இதற்கான பட்டியல் தயாரித்து, அவர்களை கண்காணிக்க, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன்உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், 'வால்' ஆட்டும் ரவுடிகள் ஒடுக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னையில் கடந்த சில வாரங்களாக, கஞ்சா, செயின் பறிப்பு, வீடு உடைத்து கொள்ளை என, தினமும் ஏதாவது குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
சமீபகாலமாக, வடசென்னை ரவுடிகளின் ஆதிக்கமும் அதிகரித்து, கொலை சம்பவங்களும் நடந்து வருகின்றன.ரோந்து தீவிரம்இதை கட்டுப்படுத்தும் வகையில், பழைய குற்ற வாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, சென்னை நகர போலீசாரின் பார்வையில் உள்ள, பழைய குற்ற வாளிகளின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகர காவல் துறை, நிர்வாக கட்டமைப்புக்காக, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம் உட்பட, 12 காவல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த காவல் மாவட்டம் தோறும், துணை போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு, அவர்
களுக்கு கீழ், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என, ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகளுடன் இணைந்து, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ரோந்து பணியை தீவிரப்படுத்துதல் என, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஆனால், அவர்களுக்கு தண்ணி காட்டி, கொள்ளையர்கள்கைவரிசையை காட்டி விடுகின்றனர்.இடையூறு கூடாதுஇதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர், பெரும்பாலும் பழைய குற்றவாளிகளாகவே உள்ளனர்.இதனால், சென்னை முழுவதும் தங்கி உள்ள, பழைய குற்றவாளிகள் குறித்த விபரங்கள், அவர்கள் வசிப்பிடம், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விபரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
மேலும், திருந்தி வாழும் குற்றவாளிகளுக்கு, எவ்வித இடையூறும் தரக்கூடாது என, போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுஉள்ளார்.அதே நேரத்தில், குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ரவுடிகள் கூடாரமான புளியந்தோப்பு!
போலீசார் தயாரித்துள்ள பட்டியல்படி, அதிகபட்சமாக, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில், 1532 குற்றவாளிகள் தங்கி உள்ளனர். குறைந்தபட்சமாக, பூக்கடை காவல் மாவட்டத்தில், 352 பேர் உள்ளனர்.
கொலை வழக்கில் சிக்கியோர், அதிகபட்சமாக, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில், 225 பேரும், குறைந்தபட்சம், பூக்கடை காவல் மாவட்டத்தில், 19 பேரும் உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, அடிக்கடி கொலை நடக்கும் புளியந்தோப்பு பகுதி, ரவுடிகளின் கூடாரமாக இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.

கொலை, கொள்ளை, ஆதாய கொலை என,
பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய பழைய குற்றவாளிகள் குறித்த பட்டியல், தயாரித்து ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில், சென்னையில் குற்ற வழக்கில் சிக்கி, வெளியூரில் வசிப்போரும் அடங்குவர். தொடர் குற்றங்களை கட்டுப்படுத்த, இந்த கண்
காணிப்பு செய்யப்படுகிறது.
போலீஸ் உயர் அதிகாரி
- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.