அவமதிப்பு வழக்கில் தப்பிய அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியதால் புது சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 டிச
2017
00:51


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தற்காலிகமாக தப்பி உள்ளனர்.
கோயம்பேட்டில், காய், கனி, மலர் மொத்த விற்பனை அங்காடி வளாகம் அமைக்க, 295 ஏக்கர் நிலத்தை, சென்னை
பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,
கையகப்படுத்தியது.
இறுதி உத்தரவு
இதில், குறிப்பிட்ட இரண்டு சர்வே எண்களுக்கு உட்பட்ட, 173 சென்ட் நிலத்தில், 65 சென்ட் நிலங்கள் பயன்
படுத்தப்படாமல் உள்ளதாக புகார் எழுந்தது.
பயன்படுத்தப்படாத இந்நிலத்தை திருப்பி அளிக்கக் கோரி, நில உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இரண்டு நீதிபதிகள் அமர்வு, மனுதாரருக்கு நிலத்தை திருப்பி அளிக்க, 2013ல் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றமும், இந்த உத்தரவை உறுதி செய்தது.
ஆனால், இத்தீர்ப்பு அமல்படுத்தாததால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, 2014ல், நில உரிமையாளர் தொடர்ந்தார்.
இந்த வழக்கில்,
சி.எம்.டி.ஏ., வீட்டுவசதி துறை அதிகாரிகள், உரிய பதில் அளிக்காமல்
இருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கே.கே.சசி
தரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைமை செயலர், வீட்டுவசதி துறை செயலர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் ஆகியோரை கண்டித்தது.
இதன்பின், இவ்வழக்கில், டிச., 5ல் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்தது.
இந்நிலையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 2013ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல்
செய்தனர்.
இதை விசாரித்த நீதி
பதிகள், குரியன் ஜோசப், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் அவ
மதிப்பு வழக்கை, 2018 பிப்., 8 வரை ஒத்தி
வைத்தனர்.
மேலும், நில உரிமையாளருக்கு நோட்டீஸ்
அனுப்பவும் உத்தர
விட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், டிச., 5ல், சென்னை உயர் நீதிமன்றம், சி.எம்.டி.ஏ., வீட்டுவசதி துறை அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கில், தீர்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அவ
மதிப்பு வழக்கில் இருந்து,
அதிகாரிகள் தற்காலிகமாக தப்பித்து உள்ளனர்.
புதிய சிக்கல்
இது குறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
உண்மை நிலவரம்
கோயம்பேடு மார்க்கெட் திட்டத்தில், நிலம் எடுப்பதில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் நிர்வாக குளறுபடியே, இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம்.
நில உரிமையாளர் முதன்முதலில் வழக்கு தொடர்ந்த போதே,
அவருடன் சமரசம் பேசி, பிரச்னையை முடித்து இருக்கலாம்.
அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, நிலத்தின் மதிப்பை விட கூடுதல் நிதியை, வழக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்காக செலவு செய்ய
வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த ஒரு வழக்குக்காக, உச்ச நீதிமன்றம் வரை சென்ற அதிகாரிகள், மற்ற அவமதிப்பு வழக்குகளை சந்திப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
நிலுவை வழக்கு விவகாரங்களை, வீட்டுவசதி துறை செயலர் தன்னிச்சையாக ஆய்வு செய்தால் மட்டுமே, உண்மை நிலவரம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
11-டிச-201710:53:51 IST Report Abuse
Chanemougam Ramachandirane நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகள் எல்லாம் சொத்து சம்பந்தமான வழக்குகள் இதை கலெக்டர் அலுவலகமே முன் நின்று தீர்வு காணனும் இவர்கள் நடவடிக்கை எடுக்காததினால் தான் நீதிமன்றத்தில் வழக்குகள் குவிகிறது இவர்களுக்கு என்ன தண்டனை என்று ஒரு தீர்ப்பில் கூட ஏன் உச்ச நீதிமன்றம் கூட நடவடிக்கை எடுக்காத அதிகாரிமேல் இழப்பீடு பெற்று தரவில்லை இனிமேல் நீதிமன்றம் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியும் செயல்படாத அரசு அதிகாரியை பணியை விட்டு நீக்கி மேலும் அதிகாரிகள் தவறை செய்து விட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று தவறான சொத்திற்கு உரிமை கோறுபவர்களுக்கு துணை போகிறாரகள் இனிநிலை மாறனும்
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-டிச-201708:23:44 IST Report Abuse
Rajendra Bupathi இவுனுங்க சொத்து விவரத்த கொஞ்சம் பாருங்கைய்யா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X