போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 டிச
2017
01:48

உதவியாளர் மீது வழக்கு


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக நர்சிங் உதவியாளர் வினோத்குமார்,34, மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.மதுரை டி.ஆர்.ஓ., காலனியை சேர்ந்த இவர், அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த 14ம் தேதி வார்டு பணியில் இல்லாததால் அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த ஆத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் டீன் அறைக்கு முன் வந்த வினோத்குமார், பாதுகாப்பு பணியில் இருந்த நாகராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். எஸ்.ஐ., ஜெயராஜ் வழக்கு பதிந்துள்ளார்.டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வினோத்குமார் மீது வழக்கு பதியப்பட்டதால், துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றார்.



2 பேர் கைது

மேலுார்: கீழவளவு வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வாச்சாம்பட்டியில் இன்னிசை கச்சேரி நடந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ராமு, மது

குடித்த மம்மானிபட்டி துரைப்பாண்டி,22, அ.கல்லம்பட்டி பாலமுருகன்,25, ஆகியோரை கண்டித்தார். ஆத்திரமுற்ற அவர்கள் ராமுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.



ஆட்டோ டிரைவர் பலி

பேரையூர்: மதுரையிலிருந்து ராஜபாளையம் சென்ற லோடு ஆட்டோவும், செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ்சும் டி.கல்லுப்பட்டி அடுத்த காடனேரி விலக்கில் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் முகமதுகாசிம்,45, இறந்தார்.



பெண்ணை கடத்திய 10 பேர் கைது

மேலுார்: புதுக்கோட்டை மாவட்டம் நெம்பக்கோட்டை மனிதநேயம்,22, திருச்சி பெட்டைவாய்த்தலை சுவிதா,23, காதல் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் தந்தை செல்வம்,50, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் தம்பதி ஆஜராகி விட்டு பஸ்சில் திரும்பினர். மேலுார் அருகே கீழையூரில் செல்வம் உட்பட 10 பேர், பஸ்சை வழிமறித்து சுவிதாவை காரில் கடத்தினர். இவ்வழக்கில் செல்வம்,50, அண்ணன் விவேக்,24, உட்பட 10 பேரை டி.எஸ்.பி., சக்ரவர்த்தி கைது செய்தார்.



10 வயது சிறுமிக்கு கொடுமை

மதுரை: பைபாஸ் ரோடு ராம்நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரும், மனைவியும் அடுத்தடுத்து இறந்துவிட, இவர்களது ௧௦ வயது மகள் சீனிவாசனின் சகோதரர் மகன் வீட்டில் வளர்ந்தார். அடிக்கடி தன்னை துன்புறுத்துவதாக கூறி பக்கத்து வீட்டில் அந்த சிறுமி தஞ்சம் அடைந்தார். அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். உறவினர்கள் பிரபு, சியாமளா, விஜயன், சித்ரா ஆகியோர் மீது சிறுவர் நலச்சட்டத்தின்கீழ் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X