போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2017
02:02

பெண்ணிடம் செயின் பறிப்பு

மதுரை: சொக்கலிங்கநகர் அம்மச்சியம்மன் கோயில் தெரு முத்துராமலிங்கம். இவரது மனைவி ஆண்டாள், 38, டிச., 23 இரவு

7:15 மணிக்கு கடைக்கு சென்றார். பின்

தொடர்ந்து டூவீலரில் சென்ற மர்ம நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து தப்பினர்.

எஸ்.எஸ்., காலனி இன்ஸ்பெக்டர்

அருணாச்சலம் விசாரிக்கிறார்.

டூவீலர்கள் திருட்டு: மூவர் கைது

மதுரை: வண்டியூர் குறிஞ்சிநகர் 8 வது வீதி

அப்துல் ஹக்கீம், 64. இவர் நவ., 26

வீட்டிற்கு முன் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டூவீலரை நிறுத்தியிருந்தார். மர்ம நபர்கள்

டூவீலரை திருடிச்சென்றனர்.அண்ணாநகர் போலீசார் விசாரித்தனர்.

எஸ்.ஐ., ஜெய்சங்கர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டார். சந்தேகத்திற்கு

இடமளிப்பதாக டூவீலரில் சென்ற அண்ணா நகர் எஸ்.எம்.பி., காலனி சக்திவேல் மகன்

கண்ணன்,19, சுப்பிரமணி மகன்

செல்வகணபதி,17, வண்டியூர் சமையன்கோயில் தெரு ராமு மகன் காஞ்சிவனம்,17, ஆகியோரை விசாரித்தார்.

மூவரும் அண்ணாநகரில் 3, சிலைமான், புதுாரில் தலா ஒரு டூவீலர் என

5 டூவீலர்களை திருடியதாக தெரிவித்தனர்.

மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

ரயில் மோதி பலி

மதுரை: ஆனையூர் ஹவுசிங்போர்டு காலனி சங்கரன் மகன் சபரிநாதன்,24.

இவருக்கு மனைவி, ஒரு வயதில் பெண்

குழந்தை உள்ளனர். வீடுகளுக்கு டைல்ஸ் பொருத்தும் பணி செய்து வந்தார். நேற்று

அதிகாலை கூடல்நகர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது கன்னியாகுமரி ரயில் மோதி

பலியானார். இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார்

விசாரிக்கிறார்.

உண்டியல் திருட்டு: நால்வர் கைது

திருமங்கலம்: திருமங்கலத்தில் கடந்த மாதம் அரசு ஓமியோபதி கல்லுாரி பெண் ஊழியர், ரோஜா தோட்டத்தில் போலீஸ்காரர் மனைவி மற்றும் மேலக்கோட்டையில் அரசு ஊழியரிடம் ஒரு கும்பல் செயின்களை பறித்து சென்றனர்.

கப்பலுாரில் வீட்டில் இருந்த நகைகளையும்

திருடினர். எஸ்.பி., அமைத்த தனிப்படையினர் விசாரித்து தி.புதுப்பட்டி வெங்கடேஷ்பிரபு, 18 என்பவரை கைது செய்தனர். அவர் வாக்கு மூலத்தின்படி ஆலம்பட்டி முனீஷ், 19, சுந்தரபாண்டி, 19, மகாபிரபு, 19 ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் இப்பகுதியில் 35 கோயில்களில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டதையும், செயின்பறிப்பில் ஈடுபட்டதையும்

ஒப்புக் கொண்டனர். இவர்களிடமிருந்து

20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

பூசாரி கொலையா

கள்ளிக்குடி: நல்லமநாயக்கன்பட்டி கோயில் பூஜாரி ராமசாமி, 60. திருமணம் ஆகாதவர்.

உறவினர் வீட்டில் வசித்து வந்த இவரை

15 நாட்களாக காணவில்லை. நேற்று இவரது உடல் அழுகிய நிலையில் புளியம்பட்டி

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டது. இவர்

தற்கொலை செய்தாரா, கொலையானாரா

என போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா: இரு பெண்கள் கைது

செக்கானுாரணி: செக்கானுாரணி போலீசார் நேற்று மாவிலிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகத்திற்கு இடமளிப்பதாக நின்ற இரு பெண்களை விசாரித்தார். மதுரை பழைய

விளாங்குடி சிவபாலன் மனைவி ஜோதி, 57, அண்ணாநகர் ஜெயா, 50, என தெரிந்தது. மேலும் கஞ்சா கடத்த முயன்றதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை

போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X