இலவச, 'பஸ் பாஸ்': தள்ளாத வயதில் தவிக்கும் முதியோர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2017
01:05

ஆவடி : ஆவடியில், இலவச, 'பஸ் பாஸ்'க்காக, மணிக்கணக்கில் காத்திருந்து, முதியோர் அவதியடைந்தனர்.



சென்னை மாநகர போக்குவரத்து கழக, குளிர் சாதன வசதிகள் இல்லாத அனைத்து பேருந்துகளிலும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு, ஒருவருக்கு, 10 டோக்கன்கள் வழங்கப்படும். நடத்துனரிடம், இந்த டோக்கன்களை கொடுத்து, கட்டணம் இல்லாமல், முதியோர் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தால், சென்னையில், 1.93 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர் பயனடைந்து வருகின்றனர்.



ஆவடி பேருந்து பணிமனைக்கு ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், முத்தாபுதுப்பேட்டை, அன்னனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதியோர், இலவச பஸ் பாஸ் வாங்குவதற்காக வருகின்றனர்.நேற்று முன்தினம், இலவச பஸ் பாஸ் வாங்குவதற்காக வந்த முதியோர், நீண்ட வரிசையில், சில மணி நேரம் காத்திருந்து, பெரும் அவதியடைந்தனர். தள்ளாத வயதில், அவர்கள் பெரும் சிரமத்துடன் காத்திருந்தனர்.கூட்டம் அலைமோதியதால், ஆவடி பேருந்து நிலையத்தில், பஸ் பாஸ் வழங்கும், போக்குவரத்து ஊழியர்களும் திணறினர்.



மாற்று ஏற்பாடு வேண்டும்

மாதத்தின் கடைசி, 10 நாட்களில் மட்டும் தான், 'பஸ் பாஸ்' வழங்குகின்றனர். இதனால், அந்த குறிப்பிட்ட நாட்களில், கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காக, மாதம் முழுவதும், பஸ் பாஸ் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முதியோர்



தவிர்க்க முடியாது

'பஸ் பாஸ்' காலாவதியாகும், கடைசி மூன்று நாட்களில் தான், முதியோர் முண்டியடித்து கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு, குறைந்தது, 900 பேர் வருகின்றனர். இதனால், நீண்ட வரிசையில், முதியோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

- போக்குவரத்துத் துறை அதிகாரி

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan Iyer - Bangalore,இந்தியா
30-டிச-201711:14:01 IST Report Abuse
Kannan Iyer அரசு மாத்தி யோசிக்க வேண்டும். எதற்கும் பாஸ்/டோக்கன்/ இந்த அவஸ்தை? சலுகை எதிர்பார்க்கும் முதியோர் வயதுக்கான ஆதாரம் கண்டக்டருக்கு காண்பித்தால் போதும் என்ற முறை கொண்டு வரலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X