மாதவரம் : மின்சாரம் பாய்ந்து, தொழிலாளி பலியானார்.
மாதவரம், பொன்னியம்மன் மேடு ராமலிங்கா காலனி பகுதியைச் சேர்ந்தவர், முகம்மது இக்பால். அவர், அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
அவரது வீட்டை, ஆந்திராவைச் சேர்ந்த கொத்தனார், முகம்மது ஆசாத், 35, உட்பட, 30 கட்டட தொழிலாளர்கள் கட்டி வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டின், இரண்டாவது தளம் கட்டுமான பணியின் போது, உயர்மின் அழுத்த கேபிள் மீது, முகம்மதுவின் கை, எதிர்பாராமல் பட்டது.
மின்சாரம் பாய்ந்ததில், முகம்மது ஆசாத் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து, மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.