மெட்ரோ - மேம்பால ரயில் இணைப்பு ஜன., 5 கூட்டத்தில் முக்கிய முடிவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
20:57

- நமது நிருபர் -

சென்னையில், மேம்பால ரயில் போக்குவரத்து திட்டத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான வரைவு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மீது, முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான, உயர் அதிகாரிகள் கூட்டம், ஜன., 5ல் நடக்க உள்ளன.

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை, மேம்பால ரயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. இத்திட்டத்தை, பரங்கிமலை வரை நீட்டிப்பதற்கான பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.

தெற்கு ரயில்வேயும், தமிழக அரசும், இத்திட்டத்தின் பங்குதாரர்களாக உள்ளனர். ஆனால், ரயில்களை இயக்குவது, நிலையங்களை பராமரிப்பது, ரயில்வே துறையின்

கட்டுப்பாட்டில் உள்ளது.

மேம்பால ரயில் போக்குவரத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான பரிந்துரையை, நீண்டகால நோக்கில் ஆய்வு செய்ய, ரயில்வே வாரியம் இசைவு தெரிவித்தது.

இதையடுத்து, கள ஆய்வறிக்கை, ஜூலையில் உயர் அதிகாரிகள் குழு கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வறிக்கை தயாரிக்க, இரண்டு தனியார் கலந்தாலோசனை நிறுவனங்கள் நியமிக்கப்பட்டன.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயர் அதிகாரி கூறியதாவது:

இதில், நிர்வாக ரீதியான நடைமுறைகளை ஆய்வு செய்ய, சி.எம்.டி.ஏ., வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்காக அமர்த்தப்பட்ட கலந்தாலோசகர் நிறுவனங்கள், வரைவு ஆய்வறிக்கையை தயாரித்து உள்ளன.

இதை ஏற்றுக்கொள்வது தொடர்பான, இறுதி முடிவு எடுப்பதற்கான, உயர் அதிகாரிகள் கூட்டம், 5ல் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


வரைவு ஆய்வறிக்கை

முக்கிய கருத்துக்கள்

மேம்பால ரயில் சேவையை, தெற்கு ரயில்வேயிடம் இருந்து முழுமையாக விடுவித்தால்

மட்டுமே, இந்த இணைப்பு சாத்தியமாகும்

'உள்ளது உள்ளபடி' என்ற அடிப்படையில், மேம்பால ரயில் திட்ட கட்டமைப்புகளை, தமிழக அரசு கையகப்படுத்தி, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்படைப்பதா அல்லது மெட்ரோ ரயில் நிறுவனம் நேரடியாக பெறுவதா என்பதில், முடிவெடுக்க வேண்டும்

ஒப்படைப்புக்கு பின், தற்போது இயக்கப்படும் ரயில்களை, தெற்கு ரயில்வேயே

எடுத்து கொள்ளலாம்

கட்டமைப்பு வசதிகளை, மெட்ரோ ரயில் நிறுவனம் மேம்படுத்தி, புதிய ரயில்களை இயக்கலாம்

கடற்கரை ரயில் நிலையத்தின் ஒரு பகுதியை, மெட்ரோ ரயில் நிறுவனம் மேம்படுத்த வேண்டும்; ராஜாஜி சாலையில் இருந்து, இதற்கு தனியாக வழி ஏற்படுத்த வேண்டும்

அனைத்து மேம்பால ரயில் நிலையங்கள், வழித்தடங்களையும், மெட்ரோ திட்ட தரத்துக்கு இணையாக மேம்படுத்த வேண்டும்

வேளச்சேரி ரயில்வே பணிமனையை மேம்படுத்துவதுடன், புதிய ரயில் பெட்டிகளையும், மெட்ரோ ரயில் நிறுவனம் வாங்க வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X