தேர்வுகளில், 'ப்ளூ பிரின்ட்' - வினா வங்கி வேண்டாம் புதிய பாடத்திட்டம் குறித்து பள்ளி தாளாளர் ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
20:58

புதிய பாடத்திட்டத்தில், புதிய தொழில்நுட்ப பாடங்கள் சேர்க்கப்படும் நிலையில், தேர்வுகளில், 'ப்ளூ பிரின்ட்' - வினா வங்கி முறைகளை பின்பற்றக்கூடாது என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மற்றும் இடம்பெற வேண்டிய அவசியமான பாடங்கள் குறித்து, சென்னை

மண்ணிவாக்கம், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர், ந.ராமசுப்ரமணியன் கருத்துக்களை தெரிவித்து

உள்ளார்.

அவரது ஆலோசனைகள் வருமாறு:

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, தமிழக பாடத்திட்டத்தில், சில அம்சங்களை கூடுதலாக சேர்க்க வேண்டும்.

தமிழ் பாடத்தில், மாணவர்களின் ஆழ்ந்த மொழித்திறனை வளர்க்க உதவும் கருத்துக்களும், மரபு கவிதைகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் பாடங்களும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

ஆங்கில பாடத்தில், பிழையின்றி பேசுதல், ஆங்கில மொழி அறிவுத்திறனை வளர்த்தல், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, மொழி ஆற்றலை மேம்படுத்துவது போன்ற அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் கணிதத்தில், சி.பி.எஸ்.இ., பாடங்களை போன்றே, முக்கிய அம்சங்களை சேர்த்து

உள்ளனர்.

எனவே, தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்ட மாணவர்கள், மருத்துவ, இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொண்டு, தேர்ச்சி

பெறலாம்.

பொருளியல், வணிக

வியல் ஆகிய இரண்டு பாடங்களும், தற்போதைய நவீன மாற்றங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு

உள்ளன.

கம்பெனி சட்டம், ஒப்பந்த

சட்டம், பொருள் விற்பனை சட்டம் போன்றவற்றை, பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பாடங்கள்

அமைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் பாடத்திட்டங்களில் உள்ளது போல், நானோ தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் குறித்த பாடங்களை இடம் பெற செய்திருப்பது, மாணவர்களுக்கு அறி வியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும்.

பொருளாதாரம் படிப்பவர்களுக்கு, கணிதத்தையும், புள்ளியியலையும் பயிற்றுவிக்கும், 'எகனாமெட்ரிக்' பாடம் உருவாக்கியிருப்பது சிறப்பு.

இந்த பாடத்திட்டத்தில், எந்த காரணத்தின் அடிப்படையிலும், ப்ளூ பிரின்ட், வினா வங்கி போன்றவற்றை அரசு பின்பற்றக்கூடாது.

'சுமை மிகுந்த பாடங்கள்' என, விமர்சனம் வந்தாலும், பின்வாங்காமல் தைரியமாக, அதை நடைமுறைப்படுத்த

வேண்டும்.

இவ்வாறு ராமசுப்ர

மணியன் கூறியுள்ளார்.


- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X