கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டம் அம்போ! : அறிவிப்போடு மாநகராட்சி அடக்கிவாசிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஜன
2018
01:46
பதிவு செய்த நாள்
ஜன 04,2018 01:42


கொட்டிவாக்கம் முதல் நீலாங்கரை வரையிலான, கிழக்கு கடற்கரை பகுதிகளை அழகுபடுத்துவதற்காக, வகுக்கப்பட்ட திட்டம், முறையான திட்டமிடல் இல்லாததாலும், மீனவ கிராம மக்களின் எதிர்ப்பாலும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சென்னையின், முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்று, கிழக்கு கடற்கரை பகுதி. சுற்றுலாத் துறைக்கு ஆண்டுதோறும், கணிசமான வருவாயை பெற்றுத் தரும், இந்த கடற்கரை பகுதிகளில், விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதும்.


திட்ட அறிக்கை:




அவ்வாறு, மக்கள் அதிகம் கூடும் நாட்களில், வாகன நெரிசல் மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளால், சுற்றுச்சூழல் மாசுபாடு

ஏற்பட்டது. இதையடுத்து, கடற்கரை பகுதிகளை அழகுபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது.

கடந்த, 2014ல், இத்திட்டத்திற்கான வரையறை தயார் செய்யப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுக் கழகமும், 'பாட்க்ரோ' என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, 15 லட்சம் ரூபாய் செலவில், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தன.



புதிய திட்டப்படி, கொட்டிவாக்கத்தில், 998 மீட்டருக்கு நடைபாதை, பாலவாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதியில், 2,012 மீட்டருக்கு சாலைகள் என, 3,010 மீட்டர் துாரத்திற்கு சாலைகள் இணைக்கப்பட இருந்தன.மேலும், மீனவர்களுக்கு, மீன் உலர்த்தும் இடம், படகு தளம், நவீன கழிப்பறைகள், திறந்தவெளி திரையரங்கம், நடைபயிற்சி செல்வதற்கு தனிபாதை, முதியோர் விளையாட தனி பகுதி...பூங்கா, வாகன நிறுத்துமிடம், மிதிவண்டி பாதை, உணவகங்கள், தியான மையம், கிரிக்கெட் உட்பட, பல விளையாட்டுகளுக்கான தனி இடங்கள், திறந்தவெளி கலையரங்கம், சிற்பக் கலைக்கூடம் ஆகியவையும் அமைக்க திட்டமிடப்பட்டன.

கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, மின் கம்பங்களில், தொலைபேசி மற்றும் முதலுதவி பெட்டி உள்ளிட்டவையும் இணைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, மாநகராட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் சார்பில், ஆய்வுகள் நடைபெற்றன.



அதிருப்தி




திட்ட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் துவங்க இருந்த நிலையில், மீனவ கிராம மக்களை பாதிக்கும் வகையில் இருந்ததால், அவர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீனவர்களின் வாழ்வாதாரம், எவ்விதத்திலும் பாதிக்காது என, உறுதி செய்த பின், திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே, மீனவ கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல், திட்டத்தை செயல்படுத்துவதை விடுத்து, எதிர்ப்பு எழுந்தவுடன், மாநகராட்சி அதிகாரிகள், ஒட்டுமொத்த திட்டத்தையும் கிடப்பில் போடுவது, நகர

மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



மாநகராட்சி உயர் அதிகாரி




கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டத்திற்கு, ஏற்கனவே, அப்போதைய மேயர், சைதை துரைசாமி தலைமையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும். நிதி ஒதுக்கீடு பெறுவதிலும் சிக்கல் உள்ளது. கடற்கரை பகுதிகளில், எந்த பணிகளை செய்தாலும், உடனே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.


மீனவ கிராம மக்கள்




கடற்கரை பகுதி தான் மீன் உலர்த்துவது, படகு முற்றங்களை கட்டுவது, மீன்களை ஏலம் விடுவது என, மீனவர்கள் பிரதான தொழில் செய்யும் இடமாக உள்ளது. இப்பகுதிகளில் அழகுபடுத்தும் திட்டம் மேற்கொள்வது, எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும். இத்திட்டம் தொடர்பாக, மீனவ கிராம மக்களிடம், கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்படவில்லை.கடற்கரையை அழகுபடுத்துவதை, நாங்கள் எதிர்க்கவில்லை.



சமூக ஆர்வலர்கள்




கொட்டிவாக்கம் முதல் நீலாங்கரை வரையிலான, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், கடலோர ஒழுங்கு முறை ஆணைய விதிகளின் படி, கடலில் இருந்து, 500 மீட்டருக்குள், எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், விதிகளை மீறி இப்பகுதிகளில், சில அரசியல்வாதிகள் வீடுகளை கட்டியுள்ளனர். அவ்வாறு, விதிமீறலில் ஈடுபட்டிருப்போர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் போன்ற, மேம்பாட்டு திட்டங்களை, விதிமுறைகளுக்கு உட்பட்டு, அவசியம் செய்ய வேண்டும்.




- நமது நிருபர்

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.