வடிகாலை இடித்த ஏரி ஆக்கிரமிப்பாளர்கள்: தொடர்ந்து மிரட்டுவதால் அதிகாரிகள் கலக்கம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
02:02

வேளச்சேரி ஏரி, உபரிநீர் வெளியேறும் வகையில், கிழக்கு பகுதியில் கட்டப்பட்ட, 3 அடி அகல வடிகால், கடந்த மாதம், ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில், மீண்டும், வடிகால் கட்ட முயன்ற ஊழியர்களை, ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து மிரட்டுவதால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.



சென்னை, வேளச்சேரி ஏரி, 265.48 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. ஆக்கிரமிப்பு போக, தற்போது, 49 ஏக்கருக்கும் குறைவாக உள்ளது.விற்பனைசில ஆண்டுக்கு முன், ஏரியை இரண்டு துண்டாக்கி, வேளச்சேரி நுாறடி சாலை அமைக்கப்பட்டது.இதனால், கிழக்கு பக்கம், 20 சதவீதம், மேற்கு பக்கம், 80 சதவீதம் என, ஏரி இரண்டாக பிரிந்தது. மேற்கு பக்க ஏரியில், கரை பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.ஆனால், கிழக்கு பக்க ஏரிக்குள், வீடு, கடைகள் கட்டப்படுகின்றன.

சாலையும் அமைக்கப்பட்டு உள்ளன.சில அரசியல்வாதிகள், இரவில், கட்டட கழிவுகளை கொட்டி, ஏரியை மூடுகின்றனர்.தண்ணீர் தெரியாதவாறு சமப்படுத்தியபின், 350, 450, 600 என, பிளாட் போட்டு, லட்சக்கணக்கில் விலை பேசி விற்பனை செய்யப்படுகின்றன.



குற்றச்சாட்டு




கடந்த, மூன்று ஆண்டு களாக, கிழக்கு பக்க ஏரிக்குள், 117 வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டு உள்ளன. தடுக்க வேண்டிய, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது ஒருபுறமிருக்க, கிழக்கு பக்க ஏரியில் மழைநீர் நிரம்பி, உபரிநீர் வெளியேறும் வகையில், நுாறடி சாலை ஓரமாக, நெடுஞ்சாலைத் துறை மூலம், 3 அடி அகல கால்வாய், நான்கு மாதத்திற்கு முன் கட்டப்பட்டது.

கடந்த மாதம் பெய்த மழையில், ஏரிக்குள் கட்டிய வீடு மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால், 3 அடி அகல வடிகால் முழுவதையும், ஆக்கிரமிப்பாளர்கள் உடைத்தனர்.

இதனால், பல லட்சம் ரூபாய், நெடுஞ்சாலைக்கு இழப்பு ஏற்பட்டது.


கோரிக்கை




தற்போது, வடிகால் கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. மீண்டும், வடிகால் கட்ட முயன்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டி வருகின்றனர்.சில கட்சியை சேர்ந்த பிரமுகர்களும், மொபைல்போனில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இதனால், ஏரி உபரிநீர் வெளியேறும் வகையில், கட்டமைப்பு அமைக்க முடியாமல், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


- -நமது நிருபர்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X