'கொற்றலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்': 8 கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
02:14


கொற்றலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, எட்டு மீனவ கிராமத்தினர், ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.ஆற்றில்,கொட்டப்படும் கழிவுகளால், 15 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக, அவர்கள் புகார் தெரிவித்தனர்.எண்ணுார் பகுதியில் இருந்து, கருங்காலி வரை உள்ள கொற்றலை ஆற்றில், முகத்துவாரகுப்பம், பெரியகுப்பம், தாழங்குப்பம் உட்பட, 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர், மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.



வருவாய் இழப்புவடசென்னை அனல் மின் நிலையங்கள், எண்ணுார் துறை

முகம் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களின் வருகையால், மீனவர்கள்

தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது.கொற்றலை ஆற்றில், வடசென்னை அனல் மின்நிலையத்தின், சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாலும், எண்ணுார் துறைமுகத்தின் விரிவாக்க பணிகளாலும், ஆற்றின் பகுதி சுருங்கி உள்ளது.இதனால், மீன்வளம் முற்றிலும் பாதித்து, மீனவர்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். கொற்றலை ஆற்றில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படியும், சாம்பல் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதிக்கும்படியும், மீனவ கிராமத்தினர், தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.



மனித சங்கிலி




இது தொடர்பாக, நேற்று, எண்ணுார் முகத்துவாரகுப்பம், காட்டு குப்பம், தாழங்குப்பம் உட்பட, எட்டு மீனவ கிராமத்தினர், வடசென்னை அனல் மின் நிலையம் அருகே, சாண்டி முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள, கொற்றலை ஆற்றில் இறங்கி, மனிதசங்கலி போராட்டம் நடத்தினர்.எண்ணுார், அனைத்து மீனவ கிராமங்கள் மற்றும் கொற்லை ஆறு மீட்புக்குழு சார்பில் நடந்த போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட படகுகளில், 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.மூழ்கும்ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்து, கலைந்து சென்றனர்.



போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது:எண்ணுார் பகுதியில் ஆறே இல்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 1996ம் ஆண்டு வரைபடத்தில், கருங்காலி வரை, கொற்றலை ஆறு இருக்கிறது.அதன் பின், வரைபடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. கொற்றலை ஆறு சுருங்கி வருவதாலும், கொட்டப்படும் கழிவுகளாலும், 15 ஆயிரம் மீனவர்களின், மீன்பிடி தொழில் பாதித்து உள்ளது.ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், வெள்ளம் வந்தால்,

வடசென்னை பகுதி மூழ்கும்.அடுத்தகட்டம் ஏற்கனவே இருந்த வரைபடத்தின்படி, கொற்றலை ஆற்றில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த வேண்டும். அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை கொட்டுவதை, தடுக்க வேண்டும்.அடுத்த கட்டமாக, 50 ஆயிரம் மீனவர்களை திரட்டி, போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள்

கூறினர்.


- நமது நிருபர்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X