மங்களூரு செல்கிறது வெளிநாட்டு மணல்: தூத்துக்குடி துறைமுகத்திற்கு இழப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2018
02:48

துாத்துக்குடி,:துாத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த வெளிநாட்டு மணல், தமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்திற்கு செல்கிறது.

தமிழகத்தில் கட்டுமானத்திற்கான மணலுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் மலேசியாவில் இருந்து ஆற்று மணலை புதுக்கோட்டையைச் சேர்ந்த நிறுவனம் இறக்குமதி செய்தது. தரமானதாகவும், விலை மலிவாகவும் விற்கப்படும் என்பதால் இந்த மணல் விற்பனைக்கு மறைமுக தடைகளை தமிழக அரசு ஏற்படுத்தியது.


இதனால் இந்த மணல், பல மாதங்களாக துாத்துக்குடி துறைமுகத்தில் உள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தினர், உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த நிறுவனம் கடந்த 4ம் தேதி 'கிரேட்டன் ஈகிள்' என்ற கப்பல் மூலம் 58 ஆயிரத்து 616 டன் மலேசிய மணலை, துாத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. துறைமுகத்தில் மணலை இறக்கும் நிலையில், தமிழகத்தில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு உருவாக்கப்பட்டுள்ள தடைகள் குறித்து அந்நிறுவனம் அறிந்தது. எனவே அந்த கப்பலை கர்நாடக மாநிலம் நியூமங்களுரு துறைமுகத்திற்கு கொண்டு செல்கின்றனர். கர்நாடகா, கேரளாவில் இறக்குமதி மணல் விற்பனை செய்யலாம்.

சென்னை நிறுவனத்தின் முடிவால் துாத்துக்குடி துறைமுகம், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கர்நாடக மாநிலத்திற்கு செல்கிறது.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X