சிட்டி கிரைம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
01:59

தொழிலாளி தற்கொலை: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்., நகரை சேர்ந்தவர் ராமதாஸ், 52; பனியன் தொழிலாளி. இவருக்கு, குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்தது. கடந்த, 7ல், மது போதையில் வந்த ராமதாஸ், வீட்டில் தகராறு செய்தார். அதன்பின், மனமுடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் தற்கொலை: பொங்கலூர், அவினாசி பாளையத்தை சேர்ந்தவர் ஜான்சன் என்ற ராஜசேகரன், 37. இவருடைய மனைவி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஜான்சன், மனைவிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவினாசிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி: வெள்ளக்கோவில் கெங்க நாயக்கன்வலசை சேர்ந்தவர் குமாரசாமி, 65; விவசாயி. இவர், வெள்ளக்கோவில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பேத்தியை பார்த்து விட்டு, மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நடேசன் நகர் அருகே மொபட் சென்ற போது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த குமாரசாமி, காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். வெள்ளக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆடு திருடிய இருவர் கைது: பொங்கலூர், தேவணம் பாளையம் ரோட்டில், அவினாசிபாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த இருவரின் பைக்கில் ஆட்டு குட்டி இருந்தது. சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், பல்லடம் கரைப்புதூரை சேர்ந்த ராஜ்குமார், 20; வீரபாண்டியை சேர்ந்த தேவிகாந்த், 19 என்பதும்; பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலை செய்வதும் தெரிந்தது. தேவணம்பாளையத்தை சேர்ந்த சரவணன், 44, வீட்டில் ஆடு திருடியதும் தெரிய வந்தது. போலீசார், அவர்களை கைது செய்தனர்.

நிறுவனத்தில் பணம் திருட்டு: திருப்பூர் தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் கவுதம்; பா.ஜ.க., பிரமுகர். இவர், அப்பகுதியில் எஸ்.கே.ஏ., டிரேக்கிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், டேபிளில் இருந்த, 12,400 ரூபாயை திருடி சென்றனர். பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த கவுதம், தெற்கு போலீசில் புகார் அளித்தார், போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X