'மொபைல் ஆப்' மூலம் ரயில் டிக்கெட் 22 ஆயிரம் பேர் பதிவிறக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
04:54

சென்னை: ரயில்வேயின் பிரத்யேக, மொபைல் போன் 'ஆப்' மற்றும் தானியங்கி டிக்கெட் இயந்திரம் வசதியை, தினமும், 22 ஆயிரம் பேர் பயன்படுத்தி, ரயில் டிக்கெட் பெறுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

புறநகர் மின்சார ரயில்களில், பயணியர்,கவுன்டரில் காத்திருக்காமலும், விரைவாகவும், ரயில் டிக்கெட் எடுக்க ஏதுவாக, தெற்கு ரயில்வேயால், 2015ல், 'யு.டி.எஸ்' மொபைல் போன் ஆப்' அறிமுகப்படுத்தப் பட்டது.மொபைல் போனில், இந்த, 'ஆப்' வசதியைபதிவிறக்கம் செய்து, விரைவாக டிக்கெட் பெறலாம். இத்துடன், 128 நிலையங்களில், தானியங்கி டிக்கெட்
இயந்திரமும் நிறுவப்பட்டுள்ளன.இவ்வசதிகளை, தினமும், 22 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்.மொபைல் போன் 'ஆப்' வசதியில், டிக்கெட் எடுப்பவர்கள், 'பிரின்ட்' டிக்கெட் எடுப்பதற்கு ஏதுவாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, கிண்டி மற்றும் தாம்பரம் நிலையங்களில், தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.மொபைல் போனில், இதற்கான விண்ணப்பதை பூர்த்தி செய்தால், இணைய தள தொடர்பால், இந்த இயந்திரங்களில் இருந்து, உரிய டிக்கெட் பெறலாம்.மொபைல் போனில், 'ஜிபிஎஸ்' வசதி இல்லாவிட்டாலும், 'புக் ஆக்டிவேட் அண்ட் டிராவல்' என்கிற வசதியில், நிலையத்தில், 'வை - பை' வசதியை பயன்படுத்தி, டிக்கெட் கவுன்டருக்கு அருகில் நின்று, தேவையான டிக்கெட் எடுக்கலாம்.மொபைல் போனில் உள்ள டிக்கெட் பதிவை காட்டி, ரயிலில் பயணம் செய்யலாம்.இவ்வசதி, சென்ட்ரலில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதற்கு, பயணியரிடம் உள்ள வரவேற்பையொட்டி, தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய நிலையங்களில், இவ்வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.