இளசுகளை அழிக்கும், 'ஹூக்கா' ரெஸ்டாரன்ட் : களையெடுக்கும் பணியில் போலீசார் தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
05:02

சென்னை : இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை சீரழித்து வரும், அனைத்து ஹூக்கா ரெஸ்டாரன்ட்டுகளை மூட, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, நேற்று, கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த, மூன்று ஹூக்கா ரெஸ்டாரன்ட்டுகளை போலீசார் மூடினர்.
தமிழகத்தில், புகையிலைப் பொருட்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
நோய்கள்
இந்த போதை பொருட்களுக்கு, அடிமையான சிறுவர்கள், இளைஞர்கள், உணவு குழாய், மூச்சு குழாய் தொடர்பான நோய்களாலும், நுரையீரல் வாய், தொண்டை புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும், புற்றுநோய் பாதிப்பால், உயிரிழப்போர் எண்ணிக்கையும், அதிகரித்து கொண்டே இருந்தது.
இதையடுத்து, 2013ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110வது விதியின் கீழ், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறையின் படி, எந்த உணவிலும், சுகாதாரத்தை பாதிக்கும் பொருள் இருக்கக்கூடாது என்றும்...
புகையிலை, நிகோட்டின் ஆகியவற்றை, உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்தார்.
எனவே, புகையிலையால் ஏற்படும், பல்வேறு வகையான புற்றுநோய்களை தடுக்கும் வகையில், குட்கா, பான்மசாலா, போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகம் செய்யவும், விற்கவும், தடை விதிக்கப்பட்டது.
இதை கண்காணிக்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவில், போலீஸ் எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சமூக நல அலுவலர்...
மாநகராட்சி, நகராட்சி ஆணையர், வணிகவரித்துறை அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், பொறுப்பு அலுவலர் ஆகியோர்
நியமிக்கப்பட்டனர்.
இந்த குழு, புகையிலை பொருட்கள் விற்பனையை, கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், தமிழகத்திற்குள் நுழைய, தடை விதிக்கப்பட்டது. அதை, போலீசார் மற்றும் வணிக வரித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை முழுவதும், 'ஹூக்கா ரெஸ்டாரன்ட்டுகள்' அதிக அளவில் பெருகிவிட்டன. இதனால், பான், குட்கா மசாலா உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளை விட, ஹூக்காவில் அதிக விளைவுகள் ஏற்படுவதாக, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
விடுமுறை
இதை அறியாமல், பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும், வார விடுமுறை தினங்களில், நண்பர்களுடன் சேர்ந்து, ஹூக்கா புகை பிடிக்கின்றனர்.
இது குறித்து, பெற்றோர், போலீஸ் உயர் அதிகாரிகளிடம், பான் குட்கா மசாலாவிற்கு தடை விதித்ததை போல், ஹூக்காவுக்கும் தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, சென்னையில் செயல்பட்டு வரும், ஹூக்கா ரெஸ்டாரன்ட்டுகள் அனைத்தையும் மூட, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்,
உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த, மூன்று ஹூக்கா ரெஸ்டாரன்ட்டுகள், நேற்று அதிரடியாக மூடப்பட்டன.
இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
தற்போது, போலீஸ்
கமிஷனர், ஹூக்கா ரெஸ்டாரன்ட்டுகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நாங்கள், முறைகேடாக செயல்படும், இந்த மாதிரியான ரெஸ்டாரன்ட்டுகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுப்போம். ஹூக்காக ரெஸ்டாரன்ட்டுகள் குறித்து, பொதுமக்கள், அந்தந்த பகுதி காவல் நிலையங்களில், புகார்
தரலாம்.
இவ்வாறு அவர்
கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஜன-201810:35:03 IST Report Abuse
Devanatha Jagannathan நல்ல உத்தரவு. இவைகளை வேரிலேயே அறுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.