சி.எம்.டி.ஏ., குழும கூட்டம் நடக்குமா? : கோப்புகளுக்கு பேரம் நடப்பதாக சர்ச்சை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
05:03


சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின், 257வது நிர்வாக குழு கூட்டம், ஜன., 18ல் நடத்தப்பட உள்ளது. நில பயன்பாடு மாற்றம் தொடர்பான கோப்புகளை, இக்கூட்டத்துக்கு அனுப்புவதில், அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சி.எம்.டி.ஏ.,வில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குழும கூட்டம் நடத்தப்படும்.
இதன்படி, சி.எம்.டி.ஏ.,வின், 256வது கூட்டம், 2016 நவ., 16ல் நடந்தது. இதன் முடிவுகள் அடங்கிய அறிக்கை, மிக தாமதமாக, டிச., 22ல் இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜன., 4ல், குழும கூட்டத்தை நடத்த திட்டமிட்டனர். ஆனால், கடைசி நிமிடத்தில், கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, ஜன., 18ல் குழும கூட்டம் நடத்த அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள்
கூறியதாவது:
ஒவ்வொரு குழும கூட்டத்திலும், முந்தைய கூட்ட முடிவுகள் மீதான, நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஆனால், 256வது கூட்ட முடிவுகள் மீது, நடவடிக்கை அறிக்கை தயாரிக்கப்படாத நிலையில், 257வது கூட்டத்தை நடத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், நில பயன்பாடு மாற்றம் தொடர்பாக, தொழில்நுட்ப குழு ஒப்புதல் அளித்த கோப்புகள், குழும கூட்டத்துக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், இதுவரை தொழில்நுட்ப குழு ஒப்புதல் அளித்த, ஏராளமான கோப்புகள் நிலுவையில் உள்ளன.
சட்ட விதிகளுக்கு மாறாக, சி.எம்.டி.ஏ., தலைவர் அலுவலகத்தில் இருந்து, சிக்னல் கிடைக்கும் கோப்புகள் மட்டுமே, குழும கூட்டத்துக்கு அனுப்ப அதிகாரிகள்
தயாராகி வருகின்றனர்.
இதில் சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள், சிலர் தரகர்களாக செயல்பட்டு, பேரம் பேசுகின்றனர்.
இந்த பின்னணியில், 257வது கூட்டம் நடந்தால், அதன் முடிவுளை எதிர்த்து, நீதிமன்றத்துக்கு செல்ல, கட்டுமான நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இதனால், இக்கூட்டம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர்கள்
கூறினார்.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.