பிறப்பு, இறப்பு பதிவுகள் பிழை திருத்தும் பணி தீவிரம்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2018
05:03

பெருங்குடி: பெருங்குடி மற்றும் ஆலந்துார் மண்டலத்தில், 2011ம் ஆண்டுக்கு முந்தைய பிறப்பு, இறப்பு பதிவுகள், மாநகராட்சி இணையதளத்தில் சான்றி
தழாக பதிவேற்றம் செய்ய உள்ளதால், கணினியில் டைப் செய்த பதிவுகளை, பிழை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட, பெருங்குடி மண்டலத்தில், 2012ம் ஆண்டுக்கு பின், நிகழும் பிறப்பு, இறப்பு பதிவுகள், மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.விரிவாக்கத்திற்கு முன், பெருங்குடி மண்டலத்தில், 1906 முதல், 2011ம் ஆண்டு வரை, 13,016 பிறப்பு மற்றும் 9,547 இறப்பு பதிவுகள், புத்தக வடிவில் உள்ளன.
இந்த பதிவுகள், சான்றிதழாக தேவைப்படும் போது, மனுதாரர் அளிக்கும் மனுவை பரிசீலித்து, மாநகராட்சி இணையதளத்தில், பிறப்பு, இறப்பு பதிவு, சான்றிதழாக, பதிவேற்றம் செய்யப்படும்.
புத்தகத்தில், பதிவு பக்கத்தை தேடி, அதை சரிபார்த்து, சுகாதார அதிகாரி பார்வைக்கு பின், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். மனுதாரரும், பல நாட்கள் அலைய வேண்டி இருந்தது.
இதன்படி, 2011க்கு முந்தைய பதிவுகளில், 5 சதவீதத்திற்கும் குறைவாக தான், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பதிவுகள், புத்தக வடிவில் உள்ளன. அவற்றை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 1906 முதல் 2011 வரை, புத்தக வடிவில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், கணினியில் டைப் செய்யும் பணி, நான்கு மாதங்களுக்கு முன் துவங்கி, தற்போது
முடிவடைந்துள்ளது. இந்த பணி, ஒப்பந்த
ஊழியர்கள் மூலம் நடைபெற்றது.
இதேபோல், ஆலந்துார் மண்டலத்தில், 1973 முதல் 2011ம் ஆண்டு வரை, 65,975 பிறப்பு மற்றும் 52,586 இறப்பு பதிவுகள், புத்தக வடிவில் உள்ளன. அந்த பதிவுகளும் கணினியில் டைப் செய்யப்பட்டன.
இந்நிலையில், கணினி பதிவையும், புத்தகத்தில் உள்ள பதிவையும் சரிபார்க்கும் பணி, வார்டு துப்புரவு ஆய்வாளர்கள் மூலம், துவங்கப்பட்டு உள்ளது.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.