சிட்டி க்ரைம் செய்திகள்... 
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
01:53

'பான்மசாலா' விற்றவர்கள் கைது

வெரைட்டிஹால் ரோடு, ரத்தினபுரி மற்றும் ராமநாதபுரம் போலீசார் நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட 'பான்மசாலா' பொருட்களை விற்பனை செய்த, ரபீக், 36, விஷ்வா, 24, நவுசத் அலி, 35, பைசல் ஹால்டர், 29, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட 'பான்மசாலா' பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


மிரட்டல் விடுத்தவர் கைது

வரதராஜபுரம் மேடு, ஜீவா வீதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 24. இவர் நேற்று முன்தினம் சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டு அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த, சிங்காநல்லுார் கமலா மில் குட்டை ரோட்டை சேர்ந்த சுரேஷ், 35, என்பவர் மது அருந்த பணம் கேட்டார். பணம் தர மறுத்த வாலிபரை கத்திரிகோலால் தாக்கியவர் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஸ்ரீனிவாசன் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லுார் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பணம், நகை திருட்டு

சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ், 50. கணபதியில் 'ஸ்டூடியோ' வைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுக்கோட்டை, காரைக்குடி சென்றார். நேற்று மதியம் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம், நகை திருடுபோனது தெரிந்தது. புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


லாட்டரி விற்றவர் கைது

உக்கடம் போலீசார் நேற்று முன்தினம் உக்கடம் பஸ் ஸ்டாண்டில் பாலக்காடு பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் சோதனையிட்டனர். அச்சமயம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்த, பிரபாகரன், 50, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X