போலீஸ் செய்திகள் (திருப்பூர்)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜன
2018
01:44

தூக்கில் ஒருவர் தற்கொலை:

திருப்பூர், வீரபாண்டி, சுண்டமேடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 32. கருத்து வேறுபடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மதுப்பழக்கம் உள்ளது. வேலைக்கும் செல்லாமல் இருந்த அவர், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


முதியவர் தற்கொலை: திருப்பூர், கல்லாங்காட்டை சேர்ந்தவர் மணி, 60. மதுப்பழக்கம் உள்ளவர்; மனநிலையும் பாதிக்கப்பட்ட அவர், 18ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத போது, மண்ணெண்ணெயை குடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


புகையிலை பொருள் விற்றவர்கள் கைது: திருப்பூர் வடக்கு போலீசார் நடத்திய சோதனையில், மண்ணரை, ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதி பெட்டிக் கடைகளில், தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், அவற்றை விற்பனை செய்த கடைக்காரகள் ஐந்து பேரை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.


மது விற்ற ஏழு பேர் கைது: திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், வடக்கு போலீசார் பல்வேறு இடங்களில் சட்ட விரோத மது விற்பனை குறித்து சோதனை செய்தனர். இந்த சோதனைகளின் போது, ஏழு பேர் பிடிபட்டனர். @Œாதனையில், 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


விபத்தில் பால்காரர் பலி: பல்லடம் இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முககிரி, 50; பால் வியாபாரி. இடையர்பாளையத்தில் இருந்து காரணம்பேட்டைக்கு மொபட்டில் சென்றார். எதிரே வந்த பைக் @மாதியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், öŒல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


பிக்பாக்கெட் ஆசாமி கைது: திருப்பூர், எஸ்.வி., காலனியை சேர்ந்தவர் யுவராஜ். 26. பழைய பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து டவுன் பஸ்சில் பயணித்தார். அப்போது அவர் பாக்கெட்டிலிருந்த மொபைல் போனைத் திருடி கொண்டு ஒருவர் தப்ப முயன்றார். பிற பயணிகளின் உதவியுடன் அந்நபரை பிடித்து தெற்கு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், நெசவாளர் காலனியைச் ÷ச்ந்த வெங்கடேசன், 31 என தெரிந்தது. அவரை கைது செய்த @பாலீŒார், சிறையில் அடைத்தனர்.


கார் திருட்டு: திருப்பூர், ஷெரீப் காலனி டவுன் விரிவு பகுதியை சேர்ந்தவர் மனோகரன், 55. அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே தனது மாருதி ஆம்னி காரை நிறுத்தி சென்றார். மீண்டும் சென்று பார்த்த போது அதை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பாறை குழியில் ஆண் சடலம்: திருப்பூர், இடுவம்பாளையம் மணியகாரர் தோட்டம் பகுதியில் பாறைக்குழி உள்ளது. அதில் உள்ள நீரில் ஏறத்தாழ, 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் மிதந்தது. அவர் யார், எப்படி இறந்தார் என எந்த விவரமும் தெரியவில்லை. வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


லாட்டரி விற்றவர் கைது: திருப்பூர் ரூரல் போலீசார் நடத்திய சோதனையில், விஜயாபுரத்தில் ஒரு டீக்கடை முன் ஒருவர் லாட்டரி விற்பனை செய்வது தெரிந்தது. விசாரணையில், அவர் லட்சுமி நகரை சேர்ந்த முருகேசன், 45 என தெரிந்தது. அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மது விற்ற மூவர் கைது: திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், வேலம்பாளையம், வடக்கு மற்றும் சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்த விற்பனை செய்த மூன்று பேரை கைது öŒ#து, 55 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


லாரி மோதி பெண் பலி: ஊத்துக்குளி, நீலிக்காடு பகுதியை சேர்ந்த நாச்சி மனைவி சாந்தி, 43. கூலி தொழிலாளி. இவர் தனது சைக்கிளில், விஜயமங்கலம் ரோட்டில் சென்றார். அப்போது அவ்வழி@யக அதிக வேகத்தில், வந்த டிப்பர் லாரி சைக்கிள் மீது மோதியது. இதில், காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.


விபத்தில் ஒருவர் பலி: பெருமாநல்லூர் அரு@க ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர் ஏசுராஜ், 28. சேலம் - கோவை என்.எச்., ரோடு, பழங்கரை அருகே பைக்கில் சென்ற அவர் மீது அவ்வழியாக வந்த ஜீப் மோதியது. இதில் காயமடைந்த அவர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தொழிலாளி தற்கொலை: திருப்பூர் ஆத்துப்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜகுரு, 48; பனியன் தொழிலாளி. இவர், சீட்டு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அதில், நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜகுரு, விஷம் குடித்து உயிரிழந்தார். வேலம்பாளையம் போலீார் விசாரிக்கின்றனர்.


 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X