'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்திற்கு விண்ணப்பித்தோர்... 23,000! கடைசி நாளில் 17 ஆயிரம் விண்ணப்பம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
02:11

பணிபுரியும் மகளிருக்கு, மானிய விலையில், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும், 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பம் வழங்க கடைசி நாளான நேற்று மட்டும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் குவிந்ததால், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் திக்கு முக்காடி போயின.


கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'பணிபுரியும் மகளிருக்கு, இருசக்கர வாகனங்கள் வாங்க, 50 சதவீத மானியம் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு

இருந்தது.அதன்படி, ஆண்டிற்கு, ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு, இருசக்கர வாகனம் வாங்க, 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இத்திட்டத்திற்கு, 'அம்மா இருசக்கர வாகன திட்டம்' என, பெயரிடப்பட்டு உள்ளது. 'ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என, முதல்வர் பழனிசாமி, 2017 பிப்ரவரியில், முதல்வராக பதவியேற்றதும் அறிவித்தார். அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.


இந்த ஆண்டு, கவர்னர் உரையில், 'பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உதவித்தொகையின் உச்சவரம்பு, 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.


இத்திட்டத்தை, ஜெ., பிறந்த நாளான, பிப்., 24ல், முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். இதை முன்னிட்டு, திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


'தமிழகம் முழுவதும், இத்திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்' என, ஜன., 22ல் அறிவிக்கப்பட்டது. அப்போதே, பிப்., 5ம் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதன்படி, இருசக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்க, கடைசி நாளான, நேற்று, சென்னையில் விண்ணப்பங்களை பெறும் இடங்களான, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.


நேற்று ஒரே நாளில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் குவிந்தனர். இதனால், நேற்று இரவு, 7:00 மணி வரை, பெண்கள் வரிசையில் நின்று, விண்ணப்பங்களை வழங்கினர். திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, நேற்று வரை, மொத்தம், 23 ஆயிரம் விண்ணப்பங்கள், சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் பெறப்பட்டுள்ளன.விண்ணப்பங்களை, மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குழு, 10ல் ஆய்வு செய்கிறது. 15ல் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எளிதில் இயங்கக்கூடிய, கியர் இல்லாத அல்லது தானியங்கி கியர் வசதி கொண்ட, இருசக்கர வாகனங்களை வாங்கலாம்; மாற்றுத்திறனாளிகள், கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்ட, இருசக்கர வாகனங்களை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.என்னென்ன ஆவணங்கள்?


விண்ணப்பதாரர்கள், வயது, வருமானம், கல்வி, முகவரி மற்றும் பணிபுரிவதற்கான சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, புகைப்படம், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை போன்றவற்றை, விண்ணப்பத்துடன் சமர்ப்பித்துள்ளனர். இதில், அனைத்து ஆவணங்களும் ஆய்வு செய்யப்படும். குறிப்பாக, பணிபுரிவதற்கான சான்றிதழ் வழங்கியோரின், நிறுவன பதிவு எண் மற்றும் அவர்களின், பி.எப்., கணக்குகள் ஆய்வு செய்யப்படும். போலியாக பணிபுரியும் ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.சிபாரிசு பெற அணிவகுப்பு!


'தமிழகம் முழுவதும், ஆண்டிற்கு, ஒரு லட்சம் பணிபுரியும் மகளிருக்கு, மானிய விலையில், இருசக்கர வாகனம் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, நடப்பாண்டில், ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. ஆனால், சென்னையில் மட்டுமே, 23 ஆயிரம் பேர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். இதில், பலர் தங்களுக்கு, மானியம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகத்தில், தற்போதே, எம்.எல்.ஏ., மாவட்ட செயலர், அமைச்சர் என, ஆளுங்கட்சி பிரமுகர்களின் சிபாரிசுக்காக, அணிவகுக்க துவங்கிவிட்டனர். வழக்கம் போல, பயனாளிகள் ஆளுங்கட்சியினராக மட்டுமல்லாமல், நடுநிலையோடு, தகுதியானவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பதே, மகளிர் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு.மண்டல வாரியாக விண்ணப்பித்தோர்

திருவொற்றியூர் 1,026

மணலி 416

மாதவரம் 725

தண்டையார்பேட்டை 3,317

ராயபுரம் 937

திரு.வி.க.நகர் 1,998

அம்பத்துார் 1,484

அண்ணாநகர் 2,304

தேனாம்பேட்டை 2,076

கோடம்பாக்கம் 2,504

வளசரவாக்கம் 1,424

ஆலந்துார் 810

அடையாறு 2,101

பெருங்குடி 1,253- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
06-பிப்-201814:10:55 IST Report Abuse
பஞ்ச்மணி என்று தனியும் இந்த இலவச தாகம் முடியல்ல
Rate this:
Share this comment
Cancel
Srini - Madurai,இந்தியா
06-பிப்-201807:40:30 IST Report Abuse
Srini இதையே சாக்கா வச்சு வண்டி விலையை கூட்டி வச்சுருக்கானுக. கேக்க தான் யாருக்கும் நாதி இல்ல.
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
06-பிப்-201807:34:05 IST Report Abuse
rmr மக்கள் வரி பணம் வீண் உருப்படியான திட்டம் இல்லாமல் இலவசம் சலுகை இது போன்றவை கொடுப்பதனாலே தமிழ்நாட்டிற்கு அழிவு, அடிப்படை தேவைகளை ஒழுங்காக செய்யத்தெரியாத அரசு இருப்பது வீண். தேவை ஒரு மாற்றம் முன்னேற்றம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X