தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை... முன்னேறும்? மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் மாநகராட்சி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 பிப்
2018
01:28

கடந்த ஆண்டு, துாய்மை நகரப் பட்டியலில், 235ம் இடத்தை பிடித்து, சென்னை பின்தங்கி இருந்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, துாய்மை பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

மக்களின் ஒத்துழைப்பையும், மாநகராட்சி எதிர்நோக்கியுள்ளது.

நாட்டு மக்களின் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், துாய்மையான நகரங்கள் மற்றும் கிராமங்களை ஊக்குவிக்க, 'துாய்மை இந்தியா' திட்டத்தை, பிரதமர், நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார்.

துாய்மைக்கான நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்திய நகரங்கள் குறித்து, இந்திய தரக் கவுன்சில் ஆய்வு நடத்தி, துாய்மை நகரப் பட்டியலை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான துாய்மை நகர பட்டியலில், 4,041 நகரங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள, 734 பெரிய நகரங்கள் மற்றும் மாநிலங்களில் தலைநகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், நகராட்சி ஆவணங்களுக்கு, 1,400, விழிப்புணர்வு பலகைகள் மற்றும் நேரடி கள ஆய்வுக்கு, 1,200, பொதுமக்களின் பங்களிப்புக்கு, 1,400 என, மொத்தம், 4,000 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

கடந்த, 2017ல், துாய்மை நகரப் பட்டியலில், 235ம் இடத்தை பிடித்து, சென்னை பின்தங்கி இருந்தது. இதனால், கடும் விமர்சனத்தை, மாநகராட்சி அதிகாரிகள் எதிர்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது, சென்னை மாநகராட்சியின், 200 வார்டுகளையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவித்து, மாநில அரசின் ஒப்புதலையும் பெற்று உள்ளது.

அதே போல், அனைத்து அரசு அலுவலகங்களில், பலகைகள் வழியாக, துாய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், 'ஸ்வச்சனா' எனும், 'மொபைல் ஆப்' வழியாக புகார் தெரிவித்தால், உடனடியாக தீர்வு ஏற்படுத்துவதிலும், சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்கிறது.

இது போன்ற செயல்பாடுகளால், இந்தாண்டிற்கான துாய்மை நகரப் பட்டியலில், சென்னையை முன்னிலைப்படுத்துவதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும், சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில், துாய்மையான நகரங்களை தர வரிசைப்படுத்துவற்காக கணக்கெடுக்கும் பணி, ஜன., 4ம் தேதி முதல், மார்ச், 10ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த பட்டியலில், சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், துாய்மை பணியில், 19 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 1,045 வாகனங்கள் துாய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், மாநகரில் துாய்மை குறித்து, தங்களது கருத்துக்களை, பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண், 1969 மற்றும், 1800 111 969 என்ற எண்களில் அழைத்து, துாய்மை இந்தியா சார்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

மேலும்,

www.swachhsurvekshan2018.org/citizenfeedback

என்ற இணையத்திலும், 'swachhata app' என்ற மொபைல் ஆப் வழியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.