தூசி படர்வதால் அடிக்கடி பழுதாகும், 'இன்சுலேட்டர்'அதிகமாகுது மாசு... செலவாகுது காசு! சென்னைக்கு மின்சாரம் கொண்டு வருவதில் புது சிக்கல் பராமரிப்பு செலவும் எகிறுவதால் மின் வாரியம், 'கிறுகிறு'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
00:07

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், சிமென்ட் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளால், நாளுக்குநாள் மாசு அதிகரித்து வருகிறது. இதனால், மின்கோபுரங்களில் துாசி படர்ந்து, இன்சுலேட்டர்கள் பழுதாவதால், சென்னைக்கு மின்சாரம் கொண்டு செல்வதில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், மணலி, அலமாதி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட, துணைமின் நிலையங்களுக்கு எடுத்து வரப்படுகின்றன. அங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின் சப்ளை
செய்யப்படுகிறது.மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, துணைமின் நிலையங்களுக்கு,
மின்சாரத்தை கடத்தி வர, வழிநெடுகிலும் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தொழிற்சாலைகள்

தரைமட்டத்தில் இருந்து, பல அடி உயரத்தில் உள்ள இந்த மின் கோபுரத்தில், 'இன்சுலேட்டர்' என்ற கருவி உள்ளது. இது, மின் கோபுரம், மின் கம்பி ஆகியவை, ஒன்றுடன் ஒன்று படாத வகையில், மின்சாரம் கடத்தி செல்ல பயன்படுகிறது.ஒரு மின் கோபுரத்தில், அதன் திறனுக்கு ஏற்ப, 15 முதல், 30க்கும் மேற்பட்ட இன்சுலேட்டர் கருவிகள் உள்ளன.எண்ணுார், மணலி மற்றும், அதை சுற்றியுள்ள பகுதிகளில், சிமென்ட், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட இடங்களிலும், அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள், ஆலைகளில் இருந்து வெளியேறும் மாசு, துாசி போன்றவை, இன்சுலேட்டரில் படர்வதால், அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால், அவற்றின் வழியாக, மின்சாரத்தை எடுத்து வருவதிலும் சிக்கல் உண்டாகிறது.

இது குறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருவள்ளூர், மணலி, காஞ்சிபுரம், ஒட்டியம்பாக்கத்தில், தலா, 400 கிலோவோல்ட் திறன், துணைமின் நிலையம், தற்போது செயல்பாட்டிற்கு வந்ததால், சென்னை மற்றும் புறநகரில், 'ஓவர்லோடு' பிரச்னைக்கு வாய்ப்பில்லை.
இருப்பினும், பனி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசு, இன்சுலேட்டர் மீது படர்ந்து, அடிக்கடி பழுதாகின்றன.

நவீன கருவி

இதனால், மின்சாரம் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. பல அடி உயரத்தில் உள்ள இன்சுலேட்டரை, அடையாளம் கண்டு, சரி செய்ய, அதிக மணி நேரமாகும்.இதனால், 'ஹாட் லைன் வாட்டர் வாஷ்' எனப்படும், மின்சாரம் செல்லும் போதே, இன்சுலேட்டரில் தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட்டது. சமீபமாக, பிளாஸ்டிக் போர்வை உள்ள நவீன இன்சுலேட்டர் கருவி பொருத்தப்படுகிறது. இவற்றுக்கு, அதிகளவில் செலவு ஏற்படுகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, தொழிற்சாலைகள் நிறைந்துள்ள பகுதிகளில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வு செய்து, ஆலைகளின் மாசு அளவை கண்காணிக்க வேண்டும்.

கடிதம்

அதிக மாசு ஏற்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மாசு
காரணமாக, இன்சுலேட்டர் பழுது தவிர்க்கப்படும். எந்த பிரச்னையும் இல்லாமல் மின்சாரம் தொடர்ந்து எடுத்து வர முடியும். இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பிரச்னை காரணமாக, சென்னைக்கு மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டால், அடிக்கடி மின்தடை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி
விடும்.

மேலும், நஷ்டத்தில் சிக்கி தவிக்கும் மின் வாரியத்திற்கு, இந்த பராமரிப்பு செலவு, மேலும் பாரத்தை ஏற்படுத்தும். இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு, மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் அமைச்சர்கள், இரு துறைகளைச் சேர்ந்த நிபுணர் குழு அமைத்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-பிப்-201809:12:20 IST Report Abuse
Srinivasan Kannaiya லைவ் லைன் வாஷிங் தொழில் நுட்பத்தை வைத்து மின் தடத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மின் தடை இல்லாமல் எல்லாவற்றையும் நீரால் கழுவி சுத்தப்படுத்தலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.