பணி நியமனத்திற்கு புதிய கட்டுப்பாடு விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
01:29

சி.எம்.டி.ஏ., மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,யில், நகரமைப்பு வல்லுனர்களை நியமிக்கும் நடைமுறையில், புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால், குறைந்த கல்வித் தகுதி உடையவர்கள் உயர் பதவிகளுக்கு வருவது தடுக்கப்படும்.
தமிழகத்தில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., - மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், நகரமைப்பு வல்லுனர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்த பணி நியமனத்திற்கென, ஒருங்கிணைந்த விதிமுறைகள் இல்லாததால் குழப்பம்
ஏற்படுகிறது.எனவே, அனைத்து துறைகளுக்கும் பயன்படுத்தப்படும் வகையில், 'நகரமைப்பு வல்லுனர்களுக்கென, பொது பணி விதிமுறைகள் உருவாக்கப்படும்' என, அரசு அறிவித்தது. இதற்காக, டி.டி.சி.பி., கமிஷனர், பீலா ராஜேஷ் தலைமையிலான குழு, வரைவு
அறிக்கையை தயாரித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, நிதித் துறை செயலர், ஊரக வளர்ச்சித் துறை செயலர்கள் தலைமையில், உயர்நிலை ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், நகரமைப்பு வல்லுனர்களுக்கான பொது பணி விதிகள் அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய
தாவது:இந்த பொது பணி விதிகள் அமலுக்கு வந்தால், தற்போது, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போல், குறைந்த கல்வித் தகுதி உடையோர் உயர் பதவிகளுக்கு வருவது தடுக்கப்படும்.
இதனால், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், உரிய கல்வித்தகுதி மற்றும் திறமையான நபர்களை பணியமர்த்த முடியும். மேலும், நகரமைப்பு வல்லுனராக தேர்வு செய்யப்படுவோர், இனி தேவைக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர்.

சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், டி.டி.சி.பி.,க்கும், மாநகராட்சி அல்லது நகராட்சிகளுக்கும் இடமாற்றம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.மேலும், நகரமைப்பு வல்லுனர்களாக தேர்வு செய்யப்படுவோர், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, கூடுதல் தொழில்நுட்ப அறிவு உடையவர்களாக இருப்பது கட்டாயமாக்கப்படும். இதனால், உயர்நிலைக் குழுவின் முடிவுகள் அடிப்படையில், இந்த பொது பணி விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்
பொழுது போக்கு


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X