மீன்பிடிக்க அனுமதி வழங்குவதால் கிடைக்கிறது... வருவாய்! பொதுப்பணித் துறை ஏரிகளில் அடுத்தடுத்து ஏலம் உரிமம் பெற அரசியல் பிரமுகர்கள் கடும் போட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
00:47

பொதுப்பணித் துறை ஏரிகளில், மீன்பிடி ஏலம் கொடுத்து, வருவாய் ஈட்டும் நடவடிக்கையில், அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர். இந்த ஏலத்திற்கு, அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

பொதுப்பணித் துறை ஏரிகளில், தானாகவும், மீன்வளத் துறை மூலமாகவும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அதிகாரிகள், விவசாயிகள் முன்னிலையில், அவற்றை ஏலம் விட்டு, அதில், ஒரு சதவீத நிதி, விவசாய மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும்.

விவசாயம்

நாளடைவில், இது மறைந்து, அந்தந்த ஊர் மக்களே, மீன்களை பிடித்து விற்பனை செய்தனர். இதில், வசதி மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களே, ஏலம் எடுத்தனர். சாதாரண மக்கள் ஏலம் எடுக்க முடியாத நிலை தொடர்ந்தது.அதே நேரத்தில், அரசியல்வாதிகளே ஏலம் எடுத்ததால், கரைகள் சேதமடைவது, தண்ணீரை இஷ்டத்திற்கு வெளியேற்றுவது போன்ற செயல்கள் அரங்கேறின. பல ஏரிகளில் தண்ணீர் இன்றி, விவசாயம் தடைப்பட்டது.

இதை தடுக்கவும், மீன்பிடி முறை வரைமுறைப்படுத்தவும், பொதுப்பணித் துறை மூலம், பொது ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அளவுக்கு அதிகமான மழை, வரலாறு காணாத வறட்சியால், மீன்பிடி ஏலம் அறிவிக்கப்படவில்லை.கடந்த ஆண்டு பருவமழை சராசரியாக இருந்ததால், ஏரிகளில், மார்ச் மாதத்திற்கு பின், மீன்பிடிக்கும் சூழல் நிலவுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தற்போது ஏரிகளில், மீன்பிடி ஏலம் வழங்குவதற்கான நடவடிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

பாசன ஏரிகள்

இதன் மூலம் வருவாய் கிடைக்கும். ஏரிகளில் சட்டவிரோதமாக, சிலர் மட்டுமே மீன்பிடிப்பதை தடுக்க முடியும். கிடைக்கும் நிதியை, பாசன ஏரிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த முடியும்.
சமீபத்தில், படப்பை பாசனப்பிரிவில் உள்ள, 52 ஏரிகளில், 2017- - 18ம் ஆண்டிற்கு, நான்கு
ஏரிகளுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது.

மீன்வளத் துறை, இந்த ஏரிகளுக்கான, மீன்பிடி ஏல தொகையை நிர்ணயம் செய்துள்ளது.
அதில், திருநீர்மலை, சிட்லப்பாக்கம் ஏரிகள், முறையே, 5.67, 5.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இது, முந்தைய ஆண்டுகளில் போன ஏல தொகையை விட, இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிமங்கலம், சோமங்கலம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற பல பெரிய ஏரிகளில், பொது ஏலம் இன்றி, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களே மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும்இந்த ஏரிகளையும், புறநகரில் உள்ள, 20க்கும் மேற்பட்ட ஏரிகளிலும், மீன்பிடி உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுஉள்ளன.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏலத்திற்காக, ஏரிகளின் பட்டியல், மீன்வளத்துறை, உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள், ஆய்வு செய்து, விலை நிர்ணயம் செய்வர். அதனை அடிப்படையாக கொண்டு, ஏலம் விடப்
படுகிறது.இந்த ஏலம் எடுப்பதற்கு, கடும் போட்டி காணப்படுகிறது. சில இடங்களில், உள்ளூர் பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஏலம் எடுக்க போட்டி போடுவர்.

சில ஏரிகள், கடுமையான போட்டியால், ஏலம் நடத்தாமல் நிறுத்தப்படுவதும் நடக்கும். குழு அமைத்து, ஆண்டுதோறும், அனைத்து ஏரிகளிலும், மீன்பிடி ஏலம் வழங்கினால், அரசுக்கு கோடிகளில் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் அதிகரிக்குமா?

ஏரிகளில் மீன்பிடிக்க, முன்பு ஊர் மக்களே ஏலம் விடும் போது, சிறிய ஏரிகள், 20 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரையும், பெரிய ஏரிகள், ஒரு லட்சம் ரூபாய் வரையும், ஏலம் போனது. தற்போது, அரசு பொது ஏலம் விடுவதால், ஏல தொகை அதிகரித்து உள்ளது. இதனால், ஆண்டிற்கு, பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். மீன்வளத் துறை போதிய ஒத்துழைப்பு அளித்தால், இந்த வருவாய், ஆண்டுதோறும் கிடைக்கும்.

ஆனால், மீன்வளத் துறை போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. ஆண்டிற்கு, நான்கு, ஐந்து ஏரிகளை மட்டும், ஏலத்திற்கான விலை நிர்ணயம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அனைத்து ஏரிகளுக்கும் விலை நிர்ணயம் செய்து தந்தால், பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஏலம் வழங்க தயாராக உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-பிப்-201809:09:18 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல்வாதிகள்... கட்சியை சார்ந்தவர்கள் ஏலம் எடுக்க தடை செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.