தேசிய விளையாட்டு போட்டியில் 23 பதக்கம் அள்ளிய தமிழக வீரர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 பிப்
2018
01:13

தாம்பரம்:தேசிய அளவில் நடந்த தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், 23 பதக்கங்களை வென்றனர்.மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள தேசிய தீயணைப்பு கல்லுாரியில், முதன்முறையாக, தேசிய அளவிலான, தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டி போட்டிகள் நடந்தன.

பிப்., 2 - 4 வரை நடந்த இந்த போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள, 29 மாநிலங்கள், ஏழு யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர பொதுத் துறை நிறுவனங்கள் என, மொத்தம், 68 அணிகளில், 1,500 பேர் பங்கேற்றனர்.தமிழகம் சார்பில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர், மீனாட்சி விஜயகுமார் தலைமையில், ஆறு அலுவலர்கள், மாவட்ட அலுவலர் மற்றும் உதவி மாவட்ட அலுவலர்கள் என, 42 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், 40 வயதுக்குட்பட்டோர் மற்றும், 40 வயதுக்கு மேற்பட்டோர் என, இரு பிரிவுகளாக தடகள விளையாட்டு போட்டிகள், கைபந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், நீளம் மற்றும்
உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.அதில், 11 தங்கம், 9 வெள்ளி மற்றும், 3 வெண்கலம் என, மொத்தம், 23 பதக்கங்களை, தமிழக வீரர்கள் அள்ளினர்.

குறிப்பாக, துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார், தடகளம், டேபிள் டென்னிஸ் (தனிநபர்), இறகு பந்து (தனிநபர்) போட்டிகளில், 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என, மொத்தம், 5 பதக்கங்களை பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர், கே.பி.மகேந்திரா, ஐ.பி.எஸ்., பாராட்டு தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.