தொழிற்சாலைகளில் ராஜ்ஜியம் செய்யும் ரவுடிகள் போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
01:24

ரவுடிகளின் பட்டியலை சேகரித்த போலீசார், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி, பல்வேறு காரியங்களை சாதித்த, 'பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அருகே நடந்த, பிரபல ரவுடி பினுவின், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, ஒரே இடத்தில் கூடிய ரவுடிகளை, போலீசார் சுற்றிவளைத்தனர். ஒரே நாள் இரவில், 74 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில், பிரபல ரவுடி பினு உள்ளிட்ட பலர் தப்பினர். அவர்களை பிடிக்க, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

பட்டியல் சேகரிப்பு

தப்பியோடியவர்களில் பலர், கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் என்பது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும், சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளின் பட்டியலையும் போலீசார் சேகரித்தனர்.

இந்த பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அந்தந்த காவல் நிலையங்களிலும், ரவுடிகளை ஒடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனிப்படைகளும், விசாரணையை துவங்கி உள்ளது.
இதில், ரவுடிகளின் ராஜ்ஜியம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பணம் கொழிப்பு

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள, ஒட்டுமொத்த ரவுடிகளின் பட்டியல் எடுத்தோம். அவர்கள் மீது எந்தெந்த காவல் நிலையங்களில், என்னென்ன வழக்குகள் உள்ளன; அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விசாரித்தோம்.
ரவுடிகளின் ஆடம்பரம், அவர்களுக்கு வருவாய் கிடைப்பது எப்படி; தலைமறைவாக இருந்து, என்னென்ன காரியங்களில் ஈடுபட்டுள்ளனர் என, முழு அளவில் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.

இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, பல தொழிற்சாலைகளில், ரவுடிகளின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்து வருவது தெரியவந்துள்ளது.ஒரகடம், மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், திருமுடிவாக்கம், அம்பத்துார், மணலி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் பிரபல தொழிற்சாலைகள் உள்ளன.

இங்கு, கட்டுமான பணிகளை எடுப்பது முதல், கழிவுகள் எடுப்பது வரை, பல்வேறு பணிகளை ஒப்பந்தம் இல்லாமல், மிரட்டி பெற்றுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பணத்தில் கொழித்துள்ளனர். இதைத்தவிர கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், ரியல் எஸ்டேட் விவகாரங்களிலும், பலர் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

முக்கிய பிரமுகர்

ரவுடிகளின் அச்சுறுத்தல் இருந்தால், தொழிற்சாலை நிர்வாகத்தினர் போலீசில் புகார் கொடுக்கலாம். இது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.தப்பியோடிய ரவுடிகளில் பலர், மொபைல்போன்களை விட்டுச் சென்று உள்ளனர்.இதில், நடிகர் -நடிகையர், பிரபலமான அரசியல் கட்சி நிர்வாகிகள், வி.ஐ.பி.,க்கள் ஆகியோரின், தொடர்பு எண்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.இதனால், ரவுடி கும்பல்களுடன் தொடர்பில் உள்ள, முக்கிய பிரமுகர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் புலம்பல்

பல்லு மதனை பிடித்து, பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரிக்கவே, ரவுடிகள் ஒன்று கூடும் தகவல், போலீசாருக்கு தெரியவந்தது. இந்த தகவலை, உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, இன்ஸ்பெக்டர் துரிதமாக செயல்பட்டதால் தான், நள்ளிரவில், ரவுடிகளுக்கு எதிரான ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்கு காரணமான இன்ஸ்பெக்டரை, உயர் அதிகாரிகள் யாரும் பாராட்டவில்லை என, போலீஸ், 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், போலீசார் புலம்பி வருகின்றனர்.

ரவுடி பினு எங்கே?

மலையம்பாக்கத்தில், போலீசார் சுற்றி வளைப்பதற்கு முன்னதாக, அங்கிருந்து பினு மற்றும் அவனது கூட்டாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். தற்போது, பினுவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில், போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல், கேரளா, ஆந்திர மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ஆனாலும், பினு இருக்கும் இடம் தெரியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
பினு, கடைசியாக பயன்படுத்திய மொபைல்போன் எண், தற்போது பயன்பாட்டில் இல்லை. அவனது கூட்டாளி எண்களும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளன. அதே போல, பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்த, லாரி ஷெட் உரிமையாளர் வேலுவையும், போலீசார் தேடி வருகின்றனர். வேலு மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X