போலீஸ் டைரி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
02:29

பிளஸ் 2 மாணவன் தற்கொலை

ஆவடி, காந்தி நகர், நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர், முத்தையா. இவரது மகன் காசிராஜன், 17; தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த காசிராஜன், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

அம்பத்துார், அத்திப்பட்டு, கலைவாணர் நகரைச் சேர்ந்தவர், விஜயலட்சுமி, 43. இவர், நேற்று முன்தினம் மாலை, மளிகை கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், முகவரி கேட்பது போல் நடித்து, விஜயலட்சுமி அணிந்திருந்த, 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர். அம்பத்துார் தொழிற்பேட்டை
போலீசார் விசாரிக்கின்றனர்.

மைனர் பெண்ணை கடத்தியவர் கைது


குரோம்பேட்டை, துர்கா நகரைச் சேர்ந்தவர், சரண்ராஜ், 24; ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரிகிறார். இவர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்துள்ளார்.
அந்த மாணவியுடன் சரண்ராஜ் ஓட்டம் பிடிக்க, மாணவியின் பெற்றோர், குரோம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார், சரண்ராஜை பிடித்து, மைனர் பெண்ணை கடத்தியதாக வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆழ்வார்திருநகர், ஸ்ரீ லட்சுமி நகரில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, குருக்கள், கோவில் நடையை திறக்க சென்ற போது, கேட் உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த, 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை


எம்.ஜி.ஆர்., நகர், சஞ்சய் காந்தி தெருவைச் சேர்ந்தவர், பேச்சிமுத்து, 40; கொத்தனார். இவர், துக்க நிகழ்வில் கலந்து கொள்ள, நேற்று அதிகாலை, சூளைப்பள்ளம் சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 8 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. அவரது வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்த, உமாசங்கர், 46, என்ற ஆட்டோ ஓட்டுனர் வீட்டில், பீரோவை உடைத்து, 23 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தவறி விழுந்து கட்டட தொழிலாளி பலி


புது பெருங்களத்துார், எம்.கே.பி.நகர், ஆப்ரகாம் தெருவைச் சேர்ந்தவர், தண்டபாணி, 48; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பீர்க்கன்காரணையில், புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். முதல் தளத்திற்கு, மணல் மூட்டையை சுமந்து சென்ற அவருக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டு, கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

1 டன் ரேஷன் கோதுமை பறிமுதல்


புளியந்தோப்பு, கேசவன் பிள்ளை பூங்கா, 15வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர், அரிகரன், 48. அவர், சூளை, பட்டாளம், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களிடம், முறைகேடாக கோதுமை வாங்கியுள்ளார். அவற்றை, சென்னையில் உள்ள பல மளிகை கடை மற்றும் உணவகங்களில் விற்பதற்காக, புளியந்தோப்பு, டிமலஸ் சாலையில், சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றார். அந்த சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்ட பேசின்பிரிட்ஜ்
போலீசார், அரிகரனிடம் விசாரித்தனர்.

இதில், அவரது வாகனத்தில் இருந்த, 20 மூட்டைகளில், 1,000 கிலோ, ரேஷன் கோதுமை இருப்பதை கண்டறிந்தனர். அரிகரனை கைது செய்த போலீசார், அவரை, அம்பத்துாரில் உள்ள உணவு பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா விற்ற இருவர் கைது

சேத்துப்பட்டு, நமச்சிவாய பாலம் அருகே, நேற்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேக நபர்கள் இருவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் அப்பு, 27, அஜய், 20, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 2.4 கிலோ கஞ்சாவை பறிமுதல்
செய்தனர்.

நகை திருடிய வாலிபர் கைது

மதுரவாயல், கந்தசாமி நகர், 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர், பாஸ்கரன், 41. ஜன., 24ல், இவர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு, 5 சவரன் நகை திருடு போனது. மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம், வானகரம் மீன் மார்க்கெட் அருகே, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர், திருவேற்காடு, சிவசங்கரி நகரைச் சேர்ந்த, ரஞ்சித்குமார், 21, என்பதும், பாஸ்கரன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.

புழல் ஏரியில் மூழ்கி நெல் தரகர் பலி

புழல் ஏரியில், ஆண் சடலம் மிதப்பதாக, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர், செங்குன்றம், நாரவாரிகுப்பம், மக்கள் முற்போக்கு மன்றம் தெருவைச் சேர்ந்த, சீனிவாசன், 48, என்பதும், நெல் தரகர் என்பதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் மாலை, மனைவியிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை என்றும் தெரியவந்தது.

லாட்டரி விற்ற ஐந்து பேர் கைது

அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள, ஜி.என்.ஜி., தெருவில், வணிக வளாகத்தின் மேல் தளத்தில், தடை செய்யபட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக, அம்பத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை, அங்கு சென்ற போலீசார், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட, வியாசர்பாடி, கார்த்திக், 36; பழைய வண்ணாரப்பேட்டை, முனுசாமி, 41; மேடவாக்கம், ராஜ், 39; தண்டையார்பேட்டை, முருகேசன், 36; வடபழனி, சந்திரன், 37, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மாணவியிடம் கைவரிசை: மூவர் கைது


ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி மகள் காயத்ரி. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், டியூஷனுக்கு சென்றுவிட்டு, தேனாம்பேட்டை, முத்தையா தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காயத்ரியின், அலைபேசியை பறித்துச் சென்றனர். போலீசார் விசாரித்ததில், அர்ஜுனன், சிலுவை உட்பட மூவரை, கைது செய்த போலீசார், அலைபேசியையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இருதரப்பினர் மோதல்: ஒருவர் கைது

ஆவடி அடுத்த அயப்பாக்கம், மூன்று நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், கிரிதரன், 28, பிரசாந்த், 22. இருவரும் நண்பர்கள். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 22, சுபாஷ், 24 ஆகியோருக்கும் இடையே, முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம், இருதரப்பினரும், கத்தி உள்ளிட்ட, பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். படுகாயமடைந்த கிரிதரன், கார்த்திக் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருமுல்லைவாயல் போலீசார், நேற்று சுபாஷை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.